Loading

ஞாயிறு, 29 மே, 2011

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 495 மார்க்! மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளி மாணவர் சாதனை மாநில அளவில் இரண்டாவது இடம்


சதாம் உசேன் பத்தாம் வகுப்புத் தேர்வில் திருநெல்வேலி மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவர் அ. சதாம் உசேன் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இம் மாணவரின் தந்தை அப்துல் ரகுமான் பீடிகளை பார்சல் கட்டும் தொழிலையும்,தாய் சுலைஹா பீவி பீடி சுற்றும் தொழிலையும் செய்து வருகின்றனர்.



சதாம் உசேன் பாடவாரியாகப் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-98,கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99.

தனது சாதனை குறித்து மாணவர் கூறியதாவது: பள்ளியில் நன்கு படித்தேன்.மாலையில் பள்ளி ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்றேன்.

எதிர்காலத்தில் இயந்திரவியல் பொறியாளராக ஆக விரும்புகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக