Loading

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

பல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு

 

மலசிக்கல் – முன்னனி நோய்கள்ல இதுவும் ஒன்னு பங்காளி! இது, இன்னைக்கு நம்ப நாகரீகத்தோட வளர்ச்சியை(!!!) காட்டுது அப்பு! வாழ்க்கையில இப்ப இருக்கிற அவசர கதி ஓட்டத்தில ஏதோ வெந்ததை தின்னு பசியை போக்கிகிட்டு ஓடிகிட்டிருக்கோம்.

சிலரு நாவுக்கு அடிமை ஆகி, டேஸ்டா இருக்குங்கிற காரணத்துக்காக வித விதமான அசைவ உணவா போட்டு தாக்கிறாங்க அப்பு! அசைவ உணவில நார் சத்து பேருக்கு கூட இல்லங்கிற உண்மையை, இவங்களுக்கு யாரும் சொல்லி தரல போல! 

உடல் உழைப்பு இல்லாம, நோகாம நோம்பு கும்புடறாங்க ஜனங்க. இன்றைய தேதியில எல்லா வேலைக்கும் மிஷினை கண்டுபிடிச்சாசி.

சிலர் தண்ணியே, போதுமான அளவு குடிக்கிறதில்ல. சொல்லபோனா சிலர் தண்ணியே குடிக்கறதில்ல. காபி, டீ, கோக், பெப்சின்னு குடிக்கிறாங்க அப்பு! 


இதுல இந்த பெண்களை பத்தி சொல்லவே வேண்டாம். அதுவும் படிக்கிற, வேலைக்கு போற பெண்கள், தண்ணி நிறைய குடிச்சா, அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்தனமேன்னு கூச்சப்பட்டுகிட்டு, சும்மா தொண்டயை நினைச்சிற அளவு மட்டும், தண்ணியை குடிக்கிறாங்க அப்பு! இந்த கொடுமையை எங்க போயி சொல்ல அப்பு!  

விளைவு மலசிக்கல். நாம சாப்பிட்ட உணவு 16-ல இருந்து 20 மணி நேரத்துகுள்ள ஜீரணமாகி, கழிவு பொருள், மலமா, மலக்குடல் வழியா வெளிவந்திடனும். அது தான் ஆரோகியத்தோட அறிகுறி. தினம் ஒரு முறையாவது மலத்தை கழிச்சடனுமப்பா! அப்படி வெளியேற்றபடாத மலம் தான் உடலுக்குள்ளேயே தங்கி கெட ஆரம்பிக்குது.

கெட்டு போகிற மலம் தான் இரத்திதில கலந்து, பல பல நோய்க்கும் மூல காரணம் ஆகுது. அதனால தான், இயற்கை மருத்துவ முறையில சொல்றாங்க நோய் ஒன்றே! பல அல்ல

இந்த நோய்க்கு நேரடி விளைவு என்ன தெரியுமா அப்பு? Piles Complaint (மூல வியாதி) அப்பு!

இதுக்கெல்லாம் தீர்வும் சொல்லிட்டு போங்க பங்காளி!

தீர்வா! சொல்றேன் கேட்டுகோங்க! இதில ஏதாவது ஒன்னோ இல்ல, எந்த காம்பினேஷன் ஒத்து வருதோ அதை Follow செய்யுங்க!







  காலையில எழுந்தவுடனே வெறும் வயித்தில 1 லிட்டர் தண்ணிய குடியீங்க. சுடுதண்ணியா இருந்தா பெட்டர். சிறுக சிறுக குடிச்சி பழகணும். முதலீலேயே 1 லிட்டர் குடிக்க முடியாது. குமட்டல் உணர்வு இருக்கும். குடிச்ச பின்னாடி ஒரு 20 நிமிஷம் வாக்கிங் போகணும். குடல் நல்லா வேலை செய்யும்.

பச்சை காய்கறி சேலட், முளைகட்டிய தானியம், பழங்கள் தோலோடு (உங்க வசதிக்கு ஏற்றபடி) தினமும் சாப்பிடுங்க. இது மலசிக்கல் இல்லாதவங்க கூட Follow செய்யனுங்க. மலசிக்கல் அதிகமாக இருக்கிறவங்க வாழைபழத்தை தோலோடு (நல்லா கவனிங்க! தோலோடு) சிறு சிறு துண்டுகளா வெட்டி, தேங்காய் துறுவல், கொஞ்சம் வெல்லம் கலந்து சாப்பிடுங்க. 2 நாளிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். தண்ணிய அதிகமா குடியீங்க. 2-ல இருந்து 4 லிட்டர் தண்ணி ஒரு நாளைக்கு குடிக்கணும். பெண்களே! உங்களுக்கு தான்! தண்ணிய குடிக்க கூச்சபடாதீங்க.

நடங்கைய்யா மக்களே! என்னோட முதல் பதிவை கொஞ்சம் பாருங்க! யோகாசனத்தில, எளிமையான ஆசனங்கள் இருக்கு. (வேறு ஒரு பதிவுல விளக்கமா ஆசனங்களை பத்தி பாக்கலாமா பங்காளி?) அதுகளை செய்யலாம்.  

அடுத்து, திரிபலா சூரணம் பொடி இருக்கு. இரவில உணவு முடிச்ச 2 மணி கழிச்சி, சுடுதண்ணியில கலந்து சாப்பிடுங்க. இல்லைன்னா, கடுக்காய், அதோடு கூட நிலவாகை பொடி சமஅளவில கலந்தும் மேல சொன்ன விதமா சாப்பிடுங்க.

காபி, டீ வேண்டாங்க! கோக், பெப்ஸியும் வேண்டாங்க! இவையெல்லாம் ஆரோகியத்தை கெடுக்கிற பானங்க. மலசிக்கிலுக்கு காரணமா இருக்குங்க. இவைகளுக்கு மாற்று, துளசி, சுக்கு, தாமரை தண்டு பானங்கள் இருக்குங்க. எல்லாம் காதிகிராப்ட் கடைகள்ல, சித்த மருந்துகள் விக்கிற கடைகள்ல கிடைக்கும்.

மைதால செய்த பலகாரங்களை (Bakery Products) குறைவா சாப்பிடுங்க. அரிசி சாதத்தை குறைச்சுகோங்க. நார் சத்து அதிகமான கோதுமை, கேழ்வரகு, கம்பு, மக்காசோளம், சேத்துக்கோங்க. பச்சை வேர்கடலை ஒரு நைட் ஊறவெச்சி காலையில ஒரு பிடி அளவு சாப்பிடுங்க.  


எனிமா கேன் - நமக்கோ உற்ற நண்பன்! மலசிக்கலுக்கோ எதிரி!  









அடுத்து எனிமா கேன். படத்தில காட்டி இருக்கிறது தான் எனிமா கேன். கேன்னில தண்ணியை நிரப்பி, Tube-ல இருந்து, காற்றை வெளியேத்திட்டு, நாசிலை ஆசனவாயில் சொருகி, தண்ணீர் உள்ளே செல்லும்படி கேனை சிறிது உயரத்தில் பிடிக்கவும். நாசில் மேல தேங்காய் எண்ணெய் தடவினா எளிதில ஆசனவாயில நுழைக்க முடியும். பழக்கமாயிடிச்சின்னா இது தேவை இருக்காது!

தண்ணீர் உள்ளே சென்றபின், மலம் கழிக்கும் உணர்வு வரும். அப்படி வராதவங்க, சில தடவை, வயிற்றை உள்ளே இழுத்து வெளியே தள்ளவும். சிறிது நேரத்தில், மலம் கழிக்கும் உணர்வு வந்தவுடன் மலம் கழிக்கலாம்.  இது தாங்க அஹிம்சை எனிமா முறை.

இந்த பெயர் எதுக்குன்னா பங்காளி, நாம இந்த கேன்ல, வெறும் தண்ணிய தான் பயன்படுத்தறோம். அதனால ஒரு தீங்கும் இல்ல. மருத்துவமனையில சோப்பு நீர் பயன்படுத்தறாங்க. அது பெரிய ஹிம்சையா இருக்கும்.

எனிமா கேன் எல்லாத்துக்கும் வசதி. எங்காவது வெளியூர் பிராயாணம் போகும்போது, சாப்பிட, எங்கே பச்சை காய்கறி சேலட் கிடைக்கும்னு அலைய முடியாது. கிடைக்கிறத தான் சாப்பிட முடியும். மலம் கழிக்கணும் என்கின்ற உணர்வே வராது! அந்த சமயத்தில இதை பயன்படுத்தலாமுங்க

பஸ் பிரயாணம் செய்றதுக்கு முன்னாடி எனிமா Use செஞ்சி மலம் கழிச்சிட்டோம்னா, மனசுக்குள்ள ஒரு நிம்மதி. இனி ஒரு 12 மணி நேரத்துக்கு தொல்லை இருக்காது பாருங்க! எந்த இடத்துக்கும் உங்க பெட்டியில போட்டு எடுத்துன்னு போக முடியும். Very Portable!

இது எங்கே கிடைக்கும்னு கேக்கறீக? இது எல்லா காதிகிராப்ட் கடைகள்ல, இயற்கை மருத்துவமனைகள்ல, கிடைக்கும். விலையும் 50 ரூபாய் தான்.   

இன்னைக்கு இது போதும் இல்லையா பங்காளி! 


நண்பர்களே, நண்பிகளே! நோய் இல்லாம வாழலாங்க! நோய் நமக்கு வரவும் வேணாம், அதுக்காக கடன்பட்டு, அள்ளல்பட்டு, கஷ்டபட்டு, வருத்தபடவும் வேணாமுங்க!

நீங்க என்ன சொல்றீங்க! யோசிச்சி முடிவு பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக