Loading

புதன், 15 செப்டம்பர், 2010


அதி சிறந்த இலவச அன்டி வைரஸ் மென்பொருள்(Comodo)

"கணனி இல்லாத கம்பனியும் இல்லை, வீடும் இல்லை, விடுதியும் இல்லை என்பது போல  வைரஸ் பாதுகாப்பு இல்லாத கணனியும் இல்லை எனலாம்"

இன்று பல அன்டிவைரஸ் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன அவ்வாறு இலவசமாக கிடைக்கும் அவேரா (avera) ,ஏவிஜி (AVG) , மைக்ரோசாஃப்ட் டிஃபன்டர் (Windows Defender) , மைக்ரோ சாஃப்ட் செகுரிட்டி (Microsoft Security Essentials ) , பாண்டா க்ளவுட் (Panda Cloud )போன்ற அன்டிவைரஸ் மென்பொருட்கள் உலகெங்கிலும் உள்ள சொந்த பாவனை பயன்பாட்டாளர்களுக்கு பாரிய உதவியாக உள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

தற்பொது இவற்றுக்கெல்லாம் போட்டியாக கொமொடொ (Comodo) என்ற நிறுவனம் ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளை வெளியிட்டுள்ளது. இதை  பயன்படுதிப்பார்த்ததில் மேல் கூறப்பட்டஅனைத்து அன்டிவைரஸ்களையும்  விட சிறந்த முறையில் வேலை செய்கின்றது. மேலும் Defense+ போன்ற இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

இதில் மற்றுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ஃயர்வாலும் (Firewall) இலவசமாக கிடைக்கின்றது. இது இணையத்தளம் மூலம் நமது தகவல்கள் திருடப் படாமலும், வைரஸ் பரவாமலும் நமது கணிணியை பாதுகாத்துக் கொள்ளும்.

இதை இங்கே சென்று  தரவிறக்கம் செய்யவும் அதற்க்கு முன்னர் உங்களது விண்டோஸ் 7, Vista அல்லது XP என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் நிறுவிய பிறகு வைரஸ் பாதுகாப்பு சிறப்பாக செயட்படுவதற்க்கு On Access மோடிற்கு மாற்றிக் கொள்ளவும். உதவிக்கு கீழுள்ள படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்.

Features

  • Detects, blocks, and destroys viruses 
  • Immediate feedback on suspicious files 
  • Protects with On Access scanning 
  • Schedule your scans
  • Daily automatic updates
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களையும், வாக்குகளையும் இட்டுச் செல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக