இருந்தும் போராட்டம் ஓயவில்லை. தற்போது அது உள்நாட்டு போராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ராணுவத்தினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சனாவில் நிலைமை மோசமாக உள்ளது.
இங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற் பட்டோர் காயம் அடைந் துள்ளனர். இருந்தும் சண்டை ஓயவில்லை. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்ட படியே உள்ளது. எனவே, சனாவில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
அங்குள்ள விமான நிலைய பகுதியிலும் கலவரம் மற்றும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. எனவே விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் விமான போக்கு வரத்து நடைபெறவில்லை. சனாவில் உணவு தட்டுப் பாடும் அதிகரித்து உள்ளது. உணவு பொருட்கள் வாங்க கடைகளில் பொது மக்கள் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர்.
வெளியூர் களுக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் கார்களுக்கு பெட்ரோல் போடவும், பாங்கிகளில் பணம் எடுக்கவும் வரிசையில் காத்து கிடக்கின்றனர். நிலைமை மோசமாவதை தொடர்ந்து அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் அங்கிருந்து வெளியேறும்படி உத்தர விட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக