மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் உள்ள கோகுலியா மாகாணத்தில் சான் ஜு யான் டி சபினாஸ் நகரம் உள்ளது.
இதன் புறநகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று திடீரென மீதேன் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டது.
உடனே மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சுரங்கத்திற்குள் 60 மீற்றர் ஆழத்தில் 14 ஊழியர்கள் சிக்கி தவிப்பது தெரியவந்தது.
எனவே அவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் திரண்டனர். சுரங்கத்தின் நுழைவு வாயிலில் காத்து கிடக்கின்றனர்.
சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் ஊழியர்களை உயிருடன் மீட்க அரசு உதவும் என மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டெரான் தெரிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஒரு சுரங்கத்தில் இதே போன்று விபத்து ஏற்பட்டது. அதில் 65 பேர் பலியானார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக