அமெரிக்க இராணுவ நடவடிக்கையால் பின்லாடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து, உலகம் முழுவதும் உஷார்ப்படுத்தும்படி, சர்வதேச போலீஸ் ஏஜென்சியான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகநாடுகளில் உள்ள தூதரகங்கள், முக்கிய வர்த்தக நகரங்களில் பாதுகாப்பினை பலப்படு்த்தும்படியும் கூறியுள்ளது. இது குறித்து இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ரொனால்டு நோபல் விடுத்துள்ள அறிக்கையில், பின்லாடன் கொல்லபட்ட போதிலும் அவரது தலைமையிலான அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தக்கூடும்.
ஏற்கனவே பின்லாடனை பிடிக்க முற்பட்டால், ஐரோப்ப முழுவதும் அணுரசாயண குண்டு வீசப்படும் என, அல்கொய்தா அமைப்பின் சீனியர் தலைவர் எச்சரித்திருந்ததை, விக்கீலீக்ஸ் வெளியிட்டதை மேற்கோள்காட்டப்பட்டது. எனவே அமெரிக்கா மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதும் உள்ள தூதரகங்கள், வர்த்தக நகரங்கள் , அணுஉலைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக