Loading

புதன், 16 பிப்ரவரி, 2011

ஈராக்கில் உயிரியல் ஆயுதங்கள் பொய்த்தகவல் !


ஈராக்கில் ஆட்சி செய்து தூக்கிலிடப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் உயிரியல் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று கருதப்பட்டது. ஈராக் போருக்கு அது முக்கியமான தூண்டுதல் விசையாகவும் இருந்தது. ஆனால் அப்படியொரு உயிரியல் ஆயுதம் இருந்ததாகக் கூறப்பட்டது பொய் என்ற விடயம் இப்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில் இருந்து தப்பிவந்து தகவல் கொடுத்த ரடிக் அகமட் அல்வான் அல் ஜனாப் என்பவர் ஈராக் உயிரியல் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்தவர். இப்போது தான் கூறியது பொய் என்று தெரிவித்துள்ளார். சதாமிடம் உயிரியல் ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று சந்தேகித்ததாகவும் பின் ஒரு பாரவண்டியில் அது கொண்டு செல்லப்படுவதாகவும் இவர் சந்தேகப்பட்டுள்ளார். இவருடைய கற்பனைப் புழுகைக் கேட்டு சன்னதமடைந்து போருக்கு சென்றுள்ளன உலக நாடுகள் என்று அச்செய்தி தெரிவிக்கிறது. கடந்த 2003 ம் ஆண்டு அமெரிக்காவின் சார்பில் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் கொலின் பவல் ஈராக்கிடம் உயிரியல் ஆயுதம் இருக்கிறதென வாதிட்டார். அத்தருணம் அதற்கு சாட்சியம் இதே கோடாரிக்காம்பு ரடிக் அகமட் அல்வான் அல் ஜனாப் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக