எகிப்து – ரூனீசியன் பாணியில் பஃரினில் ஆர்பாட்டங்கள் ஆரம்பித்துள்ளன. மக்கள் கோபமடைந்துள்ள தினம் என்ற பெயரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒருவர் மரணமடைந்து 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஃரின் தலைநகர் மனாமாவை சுற்றி இராணுவ உலங்குவானூர்திகள் நிறைந்து காணப்படுகின்றன. தலைநகரத்தை சுற்றியுள்ள சிறிய நகரங்களில் போலீசாருடன் பொதுமக்கள் ஆங்காங்கு மோதிக் கொண்டிருக்கிறார்கள். பஃரினில் சியா முஸ்லீம்களே அதிகமாக உள்ளனர், சன்னி முஸ்லீம்கள் தொகை அங்கு குறைவாகும்
. ஆர்பாட்டங்கள் பேஸ்புக், ரிவிஸ்ரர் மூலம் வழிநடாத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக