Loading

புதன், 7 செப்டம்பர், 2011

7 மாத கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த குழந்தை திருட்டு


ஆன்டிரியா என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் இவர் கொலம்பிய தலைநகர் பகோடாவை சேர்ந்தவர். ஒரு பெண் இவரிடம் அரசின் பொது சுகாதார திட்டத்தில் சேர்ந்தால் பிறக்க போகும் குழந்தைக்கு அரசு உதவி தொகை கிடைக்கும் என்றும், இந்த திட்டத்தில் ஆண்ட்ரியாவை சேர்ப்பதாகவும் கூறி ஆசை வார்த்தை காமித்து தன்னுடன் அழைத்து சென்ற அந்த பெண்.ஆள் நடமாட்டம் இல்லாத குடிசை பகுதியில் அழைத்து சென்று மயக்கம் மருந்து கலந்த பானத்தை ஆண்ட்ரியாவிர்க்கு கொடுத்து குடிக்க செய்திருக்கிறார். பானத்தை குடித்து மயக்கமான ஆண்ட்ரியா மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்கையில் தன்னுடைய வாயிற்று பகுதி கிழிக்கப்பட்டு குழந்தை திருட்டு போனதை கண்டு அதிர்ந்தார்.ஆள்நடமாட்டமே இல்லாத அந்த பகுதியில் ஆண்ட்ரியாவை காப்பாற்ற யாரும் இல்லை. வயிற்று பகுதி கிழிந்து உயிருக்கு போராடிய நிலையில் ஆண்ட்ரியா சாலை பகுதிக்கு தானாகவே வந்திருக்கிறார். சாலை பகுதிக்கு வந்தஉடன் அங்கு இருந்த சிலர் ஆண்ட்ரியாவை பார்த்து அருகே உள்ள சாண்டா மரியம் நகரின் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்பு காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஆண்ட்ரியா கூறிய குடிசை பகுதியில் போலீசார்கள் விசாரணை மேக்கொண்டனர். விசாரணையின் போது அந்த குடுசை பகுதியில் குறைமாத குழந்தையை வைத்திருந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். கைது செயப்பட்ட அந்த பெண் குழந்தை தன்னோடதுதான் என்றும் தான்தான் சமீபத்தில் பிரசவித்ததாகவும் சாதித்து இருக்கிறார்.பின்பு அவருக்கு மருத்துவ சோதனை மேற்கொண்டபோது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது உறுதியாயிற்று. மருத்துவ சோதனையில் உறுதியான பிறகு அந்த பெண் தான்தான் குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், ஆசையாலும் ஆண்ட்ரியாவை தனியாக அழைத்து சென்று காண்ணாடி போன்ற கூர்மையானத்தை ஆயுதமாக பயன்படுத்தி வயிற்ரை கிழித்து குழந்தையை திருடியதாக ஒப்புக்கொண்டார். இவ்வாறு வயிற்ரை கிழித்ததால் ஆண்டியாவின் வயிற்றினுள் மண் புகுந்து உயிருக்கு போராடி கொண்டு வருகிறார் குழந்தையின் தாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக