Loading

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சவுதிஅரேபியாவில் இளவரசர் அரண்மனைக்குள் புகுந்த மர்ம நபர் சுட்டுக்கொலை!


சவுதிஅரேபியாவின் இளவரசர் நயீப்பின் அப்துல் அசிஷ். இவர் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார். ஜித்தாவில் உள்ள அரண்மனையில் இவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.


இந்த நிலையில் அவரது அரண்மனைக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்களும் சுட்டனர்.

இதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவன் கொல்லப்பட்டான். அவனுடன் வந்த மற்றொருவன் கைது செய்யப்பட்டான். அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். எனவே பிடிபட்டவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக