அணு ஆயுதம் இல்லா உலகை உருவாக்குவோம் என்று ஜப்பான் அறைகூவல் விடுத்துள்ளது. ஹிரோஷிமா நினைவு தினத்தையொட்டி ஜப்பான் பிரதமர் இந்த அறைகூவலை விடுத்துளார். கடந்த 1940-முதல் 1945-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டியிருந்தது. இதில் கலந்துகொள்ளாமல் அமெரிக்கா ஒதுங்கி இருந்தது. போர் நடந்து கொண்டியிருக்கும்போது அமெரிக்காவின் ஒரு பகுதியில் ஜப்பான் படைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு ஆதரவாக களம் இறங்க எதிர்பார்த்துக்கொண்டியிருந்த அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பாக கிடைத்தது. உடனே அமெரிக்க போர் விமானம் அணுகுண்டை சுமந்துவந்து ஜப்பானில் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவீச்சு நடந்தது 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ம் தேதியாகும். அதனையடுத்து ஆகஸ்டு 9-ம் தேதி ஜப்பானில் உள்ள நாகசாகி நகரத்தில் அமெரிக்க போர் விமானம் அணுகுண்டை வீசி தாக்கியது.
இதிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனால் பயந்துபோன ஜப்பான் போரை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் சரணடைந்தது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்ட நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட 66-வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பள்ளி,மாணவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஜப்பான் பிரதமர் இதில் கலந்துகொண்டு பேசுகையில் அணுஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவோம் என்றார். அணு ஆயுதத்தால் ஜப்பான் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்தமாதிரியான துயரச்சம்பவம் இனி ஒரு காலத்திலும் நடக்கக்கூடாது என்றார். அந்த இரண்டு நகரங்களும் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டன. இருந்தபோதிலும் பழைய நினைவு இன்னும் அந்த நாட்டு மக்களிடையே இருந்து அகலவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக