Loading

ஞாயிறு, 3 ஜூலை, 2011

ரியாத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழப்பு


சவூதி அரேபியத் தலைநகரான ரியாத்தில் நடந்த தீவிபத்தில் 6 இந்தியர்கள் பலியாகினர்.
ரியாத்தில் உள்ள அல்பத்தா என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் 2வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இவர்கள் பலியானதாக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ. அகமது திருவனந்தபுரத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்தார்.

இறந்தபோன ஆறு பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து அகமது கூறுகையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களும் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்படும் என்றார்.இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தீவிபத்து நடந்த கட்டடத்தில் அதிகமாக இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக