திருவனந்தபுரம், ஜூலை 2: முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் 24 மணி நேர இணையதள வசதி திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி இப்புதிய வசதியை தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
முதல்வரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய இணையதளம் மூலம், முதல்வருக்கு புகார் மனுக்களை அனுப்பவும், ஏற்கனவே அனுப்பப்பட்ட புகார் மனுக்களின் நிலை குறித்து எந்த நேரமும் அறிந்து கொள்ளலாம். அரசு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், அறிக்கைகளை டவுன்லோடு செய்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், முதல்வர் உம்மன் சாண்டியின் ஃபேஸ் புத்தகத்தை தொடர்பு கொண்டு கருத்துகளை பதிவு செய்யவும், யு டியூபில் அரசு திட்டங்கள் தொடர்பான படங்களை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக