Loading

புதன், 22 ஜூன், 2011

பைலட்டின் தவறே விபத்துக்குக் காரணம் - ரஷ்யா


பைலட்டின் தவறே விமான விபத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளது ரஷ்யா. இந்த விமான விபத்தில் சுமார் 44 பேர் இறந்தனர்.

ரஷ்யாவில் நேற்று நடந்த விமான விபத்தில் சுமார் 44 இறந்தனர். மொத்தம் 52 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில், 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். முதலில் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதையின் விளக்குகள் தெரியாத காரணத்தால், ஓடுபாதையை விட்டுத் தள்ளி விமானத்தை விமானி இறக்கியதாகவும், அப்பொழுது விமானம் தரையில் மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் தகவகள் தெரிவித்தன.


தற்பொழுது முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, விமானியின் தவறே விபத்துக்குக் காரணம் என்று தெரிவித்து உள்ளது ரஷ்யா. குறிப்பிட்ட அந்த விமானத்தை ஒட்டிய விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் உத்தரவுகளை சரிவர பின்பற்றவில்லை என்றும், அவ்வாறு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து குறிப்பிடப்பட்ட ஓடுபாதையில் இறங்காமல், அதற்கு வலது புறம் இறங்கியதாகவும், அப்பொழுது ஓடுபாதையின் விளக்குகளுக்கு மின்சாரம் செல்லும் வயர்கள் விமானத்தில் மாட்டி அருந்ததாகவும், அதனால் ஓடுபாதை விளக்குகள் அணைந்து, ஓடுபாதை தெரியாமல் விமானம் விபத்துக்கு உள்ளானதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விபத்துக்குள்ளான அந்த விமானம் பழைய சோவித் தயாரிப்பான டுபலேவ் 134 வகை விமானம் ஆகும். இந்த விமானம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விமானம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக