காதல் என்பது தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் தலையெடுக்க துவங்கியுள்ளது. கண்டும் கானா காதல்!. பள்ளி மாணவி ஆசிரியருடன் காதல்!. ஓடிப்போய் கல்யாணம், என இதுபோன்று நித்தம் ஒரு செய்திகள் வந்து பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை, இந்த பயம் வாட்டி எடுக்கின்ற சமயத்தில், 60வயது மூதேவி மூதாட்டிக்கும் காதல் பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!. இதுபோன்று பொறுப்பற்ற பெண்களின் நிலை, இன்னும் வருங்கால சந்ததியினரை கீழ்த்தரமாக இட்டுச்செல்லும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது!.
![]() |
மோசம் போயிட்டியே தாத்தா!. |
பாட்டி வடைசுட்ட கதைசொல்லும் காலம் போய், இன்று வயசு பையன்களின் மனசைசுடும் கதை சொல்லும் காலம் வரை வந்துள்ளதற்கு, முழு முதல் காரணம், பெண்களின் கையில் கட்டுப்பாடற்ற இந்த செல்போன்களின் ஆதிக்கமே!. சினிமா, சின்னத்திரையுடன் செல்போனும் சேர்ந்து, இந்த சமுதாயத்தை சீரழிக்க வந்துள்ளது!. செல்போனின் மூலம் கேன்சர் வருதோ இல்லையோ!. கட்டாயம் இந்த கேடுகெட்ட காதல் வரும் என்பது மட்டும் நிருபிக்கப்பட்டுள்ளது!. 60 வயது பாட்டியின் மனதில், ஊசலை ஏற்படுத்திய இந்த செல்போன், உங்களின் 16 வயது மகளின் மனதை மாற்ற, எவ்வளவு நேரமாகும்!. சிந்திப்பவர்களுக்கு இதில் நல்ல செய்தியுள்ளது.
காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார்.

பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது.
பெங்களூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த திருப்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த லூர்துமேரி என்ற பெண் போன்மூலம் அறிமுகமானதாக தெரிகிறது. இவர்கள் போன் மூலமாகவே பேசி நட்பை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் போன் மூலம் பழக்கமான லூர்துமேரியை அண்மையில் திருப்பதி நேரில் சந்தித்ததாக தெரிகிறது.
அப்போது லூர்துமேரி 60 வயது மூதாட்டி என தெரிய வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட திருப்பதி ஒகேனக்கல் சின்னாற்றின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவு ரைகள் கூறினார்கள். பின்னர் குடும்பத்தாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.
நன்றி: நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக