Loading

ஞாயிறு, 5 ஜூன், 2011

சொன்னது நீதானா "சொல்" "சொல்" மகாத்மாவே!!


”சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ,

 அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாது…  கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ,  திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.”

நீங்கள் வைத்ய உதவி அளிக்கும்போது அதற்கு வெகுமதியாக உங்களின் நோயாளிகள் கிறித்தவ மதத்தில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்…”

”பொதுவாகக் கூற வேண்டுமெனில் எங்கெல்லாம் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அது ஒரு ஆன்மீகச் செயலாக எந்த விதத்திலும் இருந்ததில்லை. இவையெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்யப்பட்ட மதமாற்றமே”…

”கிறித்தவ மத போதனைக் குழுக்கள் தங்கள் பணியை அக்கறையுடன் ஆற்ற வேண்டுமானால்,  ஹரிஜனங்களை மதமாற்றம் செய்யும் அநாகரிகமான போட்டியிலிருந்து அவர்கள் அவசியம் விலகிக் கொள்ள வேண்டும்”…

"இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல;  அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த ‘மகாத்மாவின்‘ கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ‘ஹரிஜன்‘ பத்திரிகையில் அவர் எழுதியவை.   -  (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி -10).

சிந்திக்கவும்: தலித் மக்களுக்கு எதிராக சொல்லப்பட்ட விவர்சனங்களில் இதுவே மிகவும் கெட்டது. ஆதிக்க உயர்ஜாதிகாரர்களின் எண்ணங்கள் மகாத்மாவையும் ஆட்டிப்படைத்தது என்பதில் இருந்து தலித் மக்கள் இந்தியாவில் அனுபவிக்கும் கொடுமைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. தலித் மக்களை ஐந்தறிவு படைத்த மாட்டோடு ஒப்பிட்டிருப்பது கொடுமையோ! கொடுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக