புதிய அரசு அமைந்த பின் நடக்கும் முதல் அரசு விழாவான, இலவச அரிசி வழங்கும் திட்டம் துவக்க விழாவை, மிகவும் எளிமையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், கையெழுத்திட்ட கோப்புகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை, இன்று (ஜூன் 1) முதல் செயல்படுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி, இத்திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையில் உள்ள டி.யு.சி.எல்., ஸ்ரீராம்நகர் நியாய விலைக் கடையில், இத்திட்டத்தை, காலை 10 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். இவ்விழாவை ஒட்டி, ஆழ்வார்பேட்டை பகுதி முழுவதும் அ.தி.மு.க., கொடிகள், பேனர்கள், முதல்வரின் கட்-அவுட்கள் நேற்று வைக்கப்பட்டன. இவற்றை உடனே அகற்ற உத்தரவிடப்பட்டது.
வழியில் எந்த வரவேற்புகளும் இல்லாமல், நிகழ்ச்சியை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, ரேஷன் கடையின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மேடையில் இருந்தவாறு, இலவச அரிசி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஆடம்பர செலவுகள் எதுவும் இதற்காக செய்யப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக