தமிழக அரசு ஏழைப் பெண்களின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரத்துடன், கருகமணி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மணப்பெண் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால், கூடுதலாக திருமனத்திற்கு ரூ.25 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் திட்டங்கள் அறிவிக்கும்போது, அதில் சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நாம் அறிந்ததே!.
அதன்படி இந்த திட்டத்தில் பலன் அடைபவர்களின் மாத வருமானம் ரூ.2 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும் (அதாவது வருட வருமானம் ரூ. ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்) மணப்பெண் 10 ம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்றும் அறிவித்திருப்பது தற்கால நடைமுறைக்கு ஒத்துவராதது ஆகும். எனவே இந்த தொகையையும், கல்வி தகுதியையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை எனில், குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு இந்த திட்டம் எட்டாக் கனியாகிவிடும்.
தேவையான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
அந்த விவரம்...
-படித்த ஏழை பெண்களை பொறுத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச்சேர்ந்த பெண்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
-திருமண உதவி கேட்கும் பெண்ணின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
-இந்த தகுதியுடைய பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.
-இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.
-ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும்.
-மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறுவோருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.
கிறிஸ்தவ பெண்கள் சிலுவையுடன் கூடிய தாலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் கருகுமணியுடன் கூடிய தாலி அணிகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரேமாதிரியான தாலி செய்து கொடுக்க இயலாது. எனவே, அவரவர் விருப்பப்படி தாலியை செய்து கொள்ள வசதியாக தங்க நாணயம் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது.
மேற்கண்ட இரண்டு திருமண உதவித்திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக