நெடும்பாச்சேரி:இந்தியாவில் ஹிந்துக்களின் நலனுக்காக(?) அகில இந்திய அளவில் ஹெல்ப் லைன் வசதி துவக்கப்பட்டுள்ளதாக ஹிந்து தீவிரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளான்.கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வைத்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார் தொகாடியா.ஹிந்து புனிதஸ்தலங்கள் உள்பட நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் ஏழு பேர் கொண்ட குழு ஹெல்ப்லைனின் செயல்பாடுகளை கண்காணிக்கும்.ஹெல்ப் லைன் சேவைக்காக 25 ஆயிரம் சேவைத்தொண்டர்கள்(?) தேர்வுச்செய்யப்பட்டுள்ளனர்.020-66803300 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் உதவி கேட்டு தொடர்புக்கொண்டால் அங்குள்ள ஹெல்ப்லைன் தொண்டர்களின் விவரங்கள் அளிக்கப்படும்.
பல்வேறு இடங்களில் பயணத்திற்கு கட்டணம் குறைந்த வாகனங்கள்,தங்குவதற்கான வசதிகள், உணவு, சிகிட்சை வசதிகள், பூஜைச்செய்வதற்கான உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் இதிலிருந்து பெறலாம்.அதைப்போல பல்வேறு வழிப்பாட்டுத்தலங்களில் உறவினர்களை காணாமல் தவிப்பவர்களுக்கு அவர்களுடைய உறவினர்களை கண்டுபிடிப்பதற்கான உதவி, சட்டரீதியான இதர உதவிகள் ஆகியன இந்த ஹெல்ப் லைன் மூலமாக கிடைக்கும்.மரணத்திற்கு போராடும் இதர மதத்தினருக்கும் இந்த சேவைகள் அளிக்கப்படும் என்றாலும் புறக்கணிக்கப்பட்ட ஹிந்துக்களின் நலனுக்குத்தான் விசுவஹிந்து பரிஷத் முன்னுரிமை வழங்கும்.
ஹெல்ப்லைனின் கீழ் ஆம்புலன்சுகள் உள்பட பல்வேறு வசதிகள் கட்டங்கட்டமாக பரவலாக்கப்படும்.நாட்டில் எல்லா இடங்களிலும் ஹிந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிச்செய்ய இதன் மூலம் இலக்காக வைத்துள்ளோம்.வருடத்தில் 4 கோடி புனித யாத்ரீகர்கள் வரும் காசியிலும், 2 கோடி நபர்கள் வருகை தரும் சபரிமலையிலும் ஹெல்ப்லைன் சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும் .புனேயில் ஹெல்ப்லைனின் தலைமியிடம் அமைந்துள்ளதுஅங்கேயிருந்து அருகிலுள்ள சேவைத்தொண்டர்கள் மற்றும் சேவைகளின் விபரங்கள் கிடைக்கும்.பல்வேறு துறைகளில் சிறப்பான சேவைகளை புரிபவர்களுக்கு ஹெல்ப்லைனின் கீழ் ஹிந்து ரத்னா விருது எல்லா வருடங்களும் வழங்கப்படும்.இவ்வாரு பிரவீன் தொகாடியா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக