Loading

திங்கள், 21 மார்ச், 2011

லிபியாவுக்கு எதிரான விமானத்தாக்குதல் வெற்றிபெற முடியாது – நிபுணர்கள்


தற்போது மேலை நாடுகளின் கூட்டுப்படைகள் ஆரம்பித்துள்ள விமானத் தாக்கதல்கள் கடாபியை தோற்கடிக்க உதவாது என்று மேலைநாடுகளில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் எதிர் வளைவுகளை ஏற்படுத்திவிடவும் வாய்ப்புக்கள் உண்டென்றும் எச்சரித்துள்ளனர். உடனடியாக கூட்டுப்படையினர் தரைப்படையை இறக்காவிட்டால் இந்தப் போரில் வெற்றி காண்பது கடினம் என்பதற்கு பல்வேறு காரணங்களையும் முன்வைத்துள்ளனர்.
முதலாவது கடாபி என்பவர் மக்கள் மடிவதாலோ, லிபியாவின் உடமைகள் சேதமடைவதாலோ கவலைப்படும் ஒரு மனிதரல்ல.
இபோன்ற ஒரு மனிதர் முன்னாள் யுகோசுலாவியாவில் சேர்பிய தலைவராக இருந்தார். அவர்தான் காலம் சென்ற சலபொடான் மிலேசெவிக். இவருடைய படைகள் மீது கூட்டுப்படையினர் மூன்று மாதங்கள் தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல்களை நடாத்தினார்கள். இவர் அசையவில்லை மக்களும் உடமைகளும் அழிவது அவருக்கு கவலை தரும் ஒரு விடயமாக இருக்கவில்லை. இதேபோலவே தற்போது கடாபியும் இருக்கிறார். இவருக்கு விமானக் குண்டு வீச்சு அழிவுகள் பற்றி யாதொரு கவலையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஆப்கானில் தரைப்படையை இறக்கியபோது மலைகள் பெரும் பிரச்சனையாக இருந்தன. ஆனால் லிபிய பாலைவனத்தில் தப்பியோடவும், மறையவும் மலைகளோ காடுகளோ கிடையாது. தப்புவபர்களை எளிதாக விமானத் தாக்குதல்களால் கொன்றுவிடலாம். மேலும் தரைப்பகுதியில் ஒரு மாற்றத்தை லிபிய மக்களே முன்னெடுக்க வேண்டும் என்பதும் இயலாத காரியமே. அவர்கள் அதற்கு தகுதியில்லாத பாமர மக்களாகவே இருக்கிறார்கள். மேலும் விமானத் தாக்குதலால் கிடைக்கக் கூடிய வெற்றி தாமதமாக தாமதமாக மக்கள் மனம் மாறுவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்கண்ட ஆய்வு இன்றைய யூலன்ட் போஸ்டனில் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக