
போராட்டம் நடத்திவரும் சொந்த நாட்டு
மக்களை கூட்டுப் படுகொலைச் செய்யும்
நடவடிக்கையை அந்நாட்டு அதிபர்
முஅம்மர் கத்தாஃபி நிறுத்த வேண்டுமென
வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உறுப்பு
நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லிபியாவின் பிரச்சனைக்கு தீர்வு காண
ஐ.நா தலையிட வேண்டுமென அபுதாபி
பேலஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில்
கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒமான் மற்றும் பஹ்ரைனில் நடந்து
வரும் மக்கள்
எழுச்சிப் போராட்டத்தைக்
குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அரபுலகின் தற்போதைய சூழ்நிலைகளைக்
குறித்து அமைச்சர்கள் மதிப்பீடு செய்தனர்.
ஜி.சி.சியின் பொதுச்செயலாளர் அப்துற்றஹ்மான்
பின் ஹமத் அல் அதிய்யாவின் முன்னிலையில்
கூடிய கூட்டத்திற்கு யு.ஏ.இயின்
வெளியுறவுத்துறை அமைச்சர்
ஷேக் அப்துல்லாஹ் பின் ஸாயித் அல் நஹ்யான் தலைமை வகித்தார்.
ஜி.சி.சி நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும்,
ஐக்கியமும் வலுப்படுத்த வேண்டுமெனவும்,
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி,
அவர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற
வேண்டுமென ஷேக் அப்துல்லாஹ் தெரிவித்தார்.
பஹ்ரைனில் போராட்டத்தை கட்டுப்படுத்த
மன்னர் ஹமத் பின் ஈஸா ஆல் கலீஃபா
மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு
ஆதரவு தெரிவித்த ஷேக் அப்துல்லாஹ்,
பஹ்ரைனில் தேசிய கலந்துரையாடலுக்கு
வழிவகைச் செய்தது மிகவும்
பாராட்டிற்குரியது என தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக