Loading

சனி, 5 மார்ச், 2011

பேஸ்புக் - 3 ஆம் நபர் அப்பளிகேசன்ஸ் -கவனம்!!


இன்று கொஞ்சம் எனது துறையோடு சம்மந்தப்பட்ட தேவையான விடயத்தை பகிர்கிறேன் //

நாம் வங்கிக்கு செல்கிறோம் கடன் உதவி பெறும் அவசரத்தில் அவர்கள் தரும் படிவத்தில் என்ன இருக்கிறது என வாசிக்காமல் கையெழுத்து  இடுகிறோம் . அது நம்பிக்கை என வைத்துக்கொள்வோம் .ஆனால் அதன் விளைவு பின்னர் தான் தெரியும் .

ஆனால் அதை விட ஆபத்தானது ஒருவரது தனி அடையாளங்களை இன்னொருவர் வைத்திருப்பது . இப்போதைய முன்னணி சமூக இணையத்தளம் பேஸ்புக் அனைவரது தனி அடையாளங்களையும் வைத்திருக்கிறது. 

 ஆனால் பேஸ்புக் அல்லாத வெளி நபர்கள் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது அல்லவா ? எம்மை அறியாமலே நாம் எமது அனைத்து விடயங்களையும் வெளி நபருக்கு கொடுக்கிறோம் .அதற்க்கான ஊடகம் இந்த 3ஆம் நபர் அப்பிளிகேஷன்கள்(3rd party Applications ).

இதை பலரும் வாசிப்பதில்லை ..


சில வேளைகளில் தேவையில்லாத தகவல்களும் கேட்கப்படும் . கீழே சிறிய எழுத்தில்  "By proceeding this ,you agree to Farm villie Terms of services and privacy policy ".
 நீங்கள் வழக்கு கூட தொடரமுடியாது .

அண்மையில் வீட்டு விலாசங்களையும் தொலைபேசிஇலக்கங்களையும் நீங்கள் பயன்படுத்தும்  3 ஆம் நபர் அப்ப்ளிகேஷன்கள் அணுகுவதற்கு பேஸ்புக் அனுமதி அளித்திருக்கிறது .  

இந்த தகவல்கள் அனைத்தும் வெளி நபர்களுக்கு விற்க்கப்படும் . உங்களுக்கு தொந்தரவுகள் பல ஏற்ப்படலாம் . இதை நிறுத்துவதே சிறந்த ஒரே வழி ஆகும் .பார்பதற்கு கவர்ச்சியாகவும் வேறு வேறு தலைப்புகளிலும் வடிவங்களிலும் வரும் .ஆனால் தயவு செய்து அப்ப்ளிகேஷன்கள் பாவிக்க வேண்டாம் .

இதனை தடுப்பது இலகு 

பேஸ்புக் கணக்கில் நுழைந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் ACCOUNT பகுதிக்கு சென்று PRIVACY SETTINGS அழுத்தவும் .

கீழே APPS AND SETTINGS பகுதியை எடிட் செய்யவும் ..

.
அதில் Remove Unwanted or spammy Applications    என்ற பகுதியை அழுத்தி தேவையில்லாததை அகற்றலாம் .

உங்கள் நண்பர்கள்  அதை பாவித்தாலும் ஆபத்து இருக்கிறது .அதை தடுப்பது பற்றி .மேலே உள்ள பகுதிக்கு கீழே உள்ளது இது .


உங்கள் கணக்கை திருடுபவர்களிடம் இருந்து பாதுகாக்க முக்கியமாக செய்ய வேண்டியது .

Account - Account settings சென்று Account security edit செய்து இந்த செயன்முறையை செய்யவும் .

இதன் தொழில்நுட்ப பொறிமுறையை உங்களோடு பகிர்கிறேன்.

பேஸ்புக் செர்வர்கள் மூன்றாம் நபர் அப்ப்ளிகேஷன்களை  வைத்திருப்பதில்லை . பெஸ்புக்கின் API (Application programming Interface ) ,REST Interface என்றால் அந்த மூன்றாம் நபர் அப்பிளிகேஷன்கள் பேஸ்புக் உடன்  இடைநிலை தொடர்பை ஏற்ப்படுத்த HTTP GET அல்லது POST முறையை பயன்படுத்துகின்றன .  

HTTP என்பது இணையத்தினூடு world wide web (www ) ஆல் பயன்படுத்தப்படும் தொடர்புவரைமுறை(Protocol ) கொண்ட தொடர்பாடல் . GET முறை இணைய பக்கத்தில் இருந்து  தகவல்களை எடுக்கவும் POST முறை தகவல்களை சேர்க்கவும் பயன்படுகிறது .

அதாவது பேஸ்புக் அப்பிளிகேஷன்களால் உங்கள் ப்ரோபாயில்களில் இருந்து தகவல்களை எடுக்கவும் இடவும் முடியும் .

3 ஆம் நபர் அப்பிளிகேசன்களை செய்பவர்கள் FQL (Facebook Query language ) ஐ பயன்படுத்துகின்றனர் .SQL இட்க்கு ஒப்பானது தான் . இவை programming Languages .டேடாபேசில் இருந்து  தகவல்களை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டவை . இதனால் அப்பிளிகேஷன்களை உருவாக்குபவர் அந்த அப்பிளிகேஷன்களை பாவிப்பவரிடம் இருந்து அனைத்து தகவல்களையும் பெற முடியும் .

அவ்வளவு தான் விடயம்..ஆனால் பேஸ்புக்கில் அப்பிளிகேசன் பாவிப்பதே வேலையாக வைத்திருப்பவர்களுக்கு தான் வேறு வழி இல்லை .
நன்றி விம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக