லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி ஆட்சிக்கட்டிலில் இறுகப்பிடித்து அமாந்திருக்கும் கேணல் கடாபியினுடைய 40 வருட ஆட்சிக்கு பரிசாக கடந்த 2010 ம் ஆண்டு இத்தாலிய பிரதமர் ஐ.சி ரெயில் வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்தாலிய பத்திரிகை டெனாரோ வெளியிட்ட செய்தியில் லிபிய – இத்தாலிய மக்களின் நட்புறவுக்காக இந்த ரயில் வண்டி வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது வெளியான செய்திகளின்படி அது இத்தாலிய பிரதமர் பலர்ஸ்கோனியின் தனிப்பட்ட அன்பளிப்பாக வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்ற வாரம் பதவி விட்டு விலகி ஓடிய கொஸ்னி முபாரக்கை அறிவுள்ள அதிபர் என்று சில்வியோ பலர்ஸ்கோனி பாராட்டியது கவனிக்கத்தக்கது. அதேவேளை இத்தாலிய ஐ.சி ரயில் வண்டிகளை தயாரித்து வரும் அன்சல்டோபெற்ரா நிறுவனம் இதே காலத்தில் டென்மார்க்கிற்கு ஒரு ஐ.சி ரெயிலை விற்பனை செய்ய உடன்பட்டிருந்தது, ஆனால் இன்றுவரை அது வந்து சேரவில்லை. கடாபிக்கு கொடுத்த பரிசு டென்மார்க் வந்திருக்க வேண்டிய ஐ.சி.ரெயில் வண்டியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து டென்மார்க்கில் இருந்து விசாரிக்கப்பட்டபோது லிபியாவுக்கு ஒரு கண்காட்சிக்காக அந்த ரயில் வண்டி போயிருப்பதாகவும் இம்மாதம் வந்துவிடும் என்றும் இத்தாலியில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. உலக ஜனநாயக ஆட்சிகளும், அதிகாரங்களும் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. மாடாய் உழைத்து ஓடாய் இளைக்கும் தொழிலாளிகளின் பரிதாப நிலையையும் இத்துடன் ஒப்பு நோக்குவது அவசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக