எகிப்தின் இஸ்லாமிய சகோதர அணியால் அமெரிக்கா பெரும் கவலை
எகிப்தில் ஆர்பாட்டங்களை முன்னின்று நடாத்தியவர்களில் முக்கியம் பெறுவது இஸ்லாமிய சகோதரர் அணியாகும். இவர்கள் முபாரக் ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்துள்ளனர். இவர்களை தடை செய்தமைக்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போராட்டங்களில் கடும் போக்காளருக்கு எகிப்தில் இருந்து ஆயுதங்களை இரகசியமாக சப்ளை செய்தவர்கள் இவர்களே என்றும் கூறப்பட்டது. மேலும் இவர்கள் சியா முஸ்லீம் பிரிவினராக இருப்பதால் ஈரானில் பெரும்பான்மையாக இருக்கும் சியா முஸ்லீம்களுடன் இயல்பாகவே ஒரு சகோதரத்துவம் பெருக வாய்ப்புள்ளது. இவர்கள் ஆட்சியின் முக்கிய அதிகாரத்திற்கு வந்தால் தற்போது மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பிற்காக நிலை கொண்டுள்ள இராணுவம், அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேல் போன்றவற்று பெரும் ஆபத்தாக அமையும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டத் தொடங்கியுள்ளது. இஸ்லாமிய சகோதர அமைப்பு ஜனநாயக வழிக்கு வந்தாலும் அது ஆட்சியின் முக்கியமான இடத்திற்கு வராமல் தடைசெய்வதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளாக தெரியவருகிறது. மத்திய கிழக்கு தீர்வுத்திட்டம், அமெரிக்கா மத்திய கிழக்கில் நடாத்தும் அரசியல் அனைத்துக்கும் பயங்கரவாதம் இல்லாமல் ஜனநாயகப் பாதையில் எதிர்ப்பு உருவாகலாம் என்றும் அது பயப்பட ஆரம்பித்துள்ளது. மக்கள் போராட்டம் வெற்றி பெற்றாலும் பிராந்திய அரசியல் அதற்கு எதிராக எப்படித் தொழிற்படும் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக