125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணைய தளத்திலும் வெளியாகி உள்ளது. கோகோ-கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலாளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக