குணப்படுத்த முடியாத நோயாக இருந்த புற்று நோய், இன்று முழுவதும் குணப்படுத்தக்கூடியவை. அதற்கு தேவை ""ஆரம்ப கால கண்டுப்பிடிப்பு மற்றும் முறையான
சிகிச்சை. புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளில் புதியது எது என்று பார்ப்போம்.ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவது தான் அதிகம். ஆனால், இப்போது அது குறைந்து, மார்பக புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆண்களிடமும் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உணவுக் குழாய் மற்றும் இரைப்பை புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம் நமது மக்களிடையே வேகமாக மாறி வரும் வாழ்க்கை முறையும், உணவுப்பழக்க வழக்கங்களும் தான்.
பிடிக்க, ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதன் பயாப்ஸி முடிவு தெரிய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனால் இன்றோ, ஒரு நுண்ணூசி பரிசோதனை மூலம் சில சிமிடங்களில் புற்றுநோயைக் கண்டுபிடித்து விடலாம். மேலும், நோயின் உண்மையான பரிமாணத்தை அறியவும், அது எங்கெங்கு பரவியுள்ளது என்பதை அறியவும், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சிடி ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல், நோயைக் குணப்படுத்துவதே நவீன மருத்துவம்.கை, கால்களை அகற்றாமல், எலும்பு மற்றும் தசை புற்று நோய்
களைக் குணப்படுத்துதல். முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வாய்ப்புற்றுநோயைக் குணப்படுத்துதல், இதற்கு "" கன்சர்வேடிவ் ஆர்கன் சர்ஜரி'' கன்சர்வேட்டிவ் ஆர்கன் சர்ஜரி என்று பெயர். மேலும் புற்று நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சைக்குப் பின், மைக்ரோ வாஸ்குலர் சர்ஜரி என்ற பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உடம்பில் கொஞ்சம் கூட மாற்றம் தெரியாமல் செய்து விடலாம்.கதிரியக்க சிகிச்சை: முன்பு கதிரியக்க சிகிச்சை அளிக்கும் போது, அருகில் உள்ள திசுக்களும் பாதிக்கப்பட்டு புண் ஏற்பட்டு வந்தது. ஆனால் லீனியர் அக்சலரேட்டர் என்ற கருவி மூலம் கதிரியக்க சிகிச்சை அளிக்கும்போது அருகில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதில்லை. இப்போது சிறிய ஊசிகள் மூலம் கதிரியக்கத்தை உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க முடியும்.
மருத்துவ சிகிச்சை: முன்பு கீமோதெரபி எனப்படும் மருந்துகளை உபயோகிக்கும்போது, வாயில் புண், உதட்டில் புண், தலை முடி உதிர்தல், வாந்தி, பசியின்மை, ரத்தச்சோகை, வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆனால், இவையெல்லாம் ஏற்படுத்தாத கீமோதெரபி மருந்துகளும் உள்ளன. மற்ற புதியவை: எலும்பு மஜ்ஜை மாற்றம் மூலம் ரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். ஜீன் தெரபி என்ற மரபணு சிகிச்சை மூலம் புற்று நோயை, வருமுன் கண்டறிந்து தடுத்து விடலாம். முன்பு புற்று நோய் வந்தால், சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமே என்று பயந்து நோயை முற்ற விட்டவர்கள் அதிகம். ஆனால் இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், காப்பீட்டுத்திட்டங்கள், பிரதமர் மற்றும் முதல்வரின் உதவித்தொகைகள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஏழைப் புற்று நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளன.புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்! புற்றுநோயை ஒழிப்போம்!!- -டாக்டர் மோகன் பிரசாத்.
தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக