கோலாலம்பூர், பிப்.27: தடை செய்யப்பட்ட ஹிண்ட்ராஃப் அமைப்பு தொடர்புடைய ஒரு இயக்கத்தைச் சேர்ந்த 109 உறுப்பினர்களை மலேசிய போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உயர்கல்வி பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோதமாக பேரணி நடத்த முயன்ற குற்றத்துக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட ஹிண்ட்ராஃபின் கிளை அமைப்பான இந்து உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணி நடத்த வேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தோம். எனினும் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவரும், துணை கமிஷனருமான ஜுல்கிஃப்லி அப்துல்லா தெரிவித்தார்.
மனித உரிமைக் கட்சி/இண்ட்ராப் பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 109 என்றும் ஏற்கனவே கூறப்பட்டது போல 183 அல்ல என்றும் கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் சுல்கிப்லி அப்துல்லா கூறினார்.
போலீஸ் நடவடிக்கையின்போது தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட 183 பேரில் வழிப்போக்கர்களும் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அடங்குவர் என அவர் சொன்னார். அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
பேரணி தொடர்பில் கைதானவர்கள் 18 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் எண்மர் பெண்கள். எட்டு பேர் மனித உரிமைக் கட்சித் தலைவர்கள் என்றும் சுல்கிப்லி அறிவித்தார்.
போலீஸ் நடவடிக்கை பற்றி விளக்கிய சுல்கிப்லி, “ஒன்று கூடுவதற்கான அனுமதி நிரகாரிக்கப்பட்டும் அதற்கு திட்டமிட்டவர்கள் அதனைத் தொடருவதற்குப் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”, என்றார்.
தாங்கள் மாற்று ஊடகங்களைச் சார்ந்தவர்கள் என்று இருவர் கூறிக் கொண்டதாகவும் சுல்கிப்லி தெரிவித்தார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் போலி பத்திரிக்கை அடையாள அட்டைகளை வைத்திருந்த அடையாளம் தெரியாத சிலர் போலீசாருடன் மோதுவதற்கு முயற்சி செய்ததாக மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் சட்ட விரோதமாக கூடியதற்காக போலீஸ் சட்டத்தின் 27(5) வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
மனித உரிமைக் கட்சித் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள எண்மர் மீது சட்டவிரோத அமைப்பு ஒன்றுடன் சம்பந்தப்பட்டதற்காகவும் சங்கச் சட்டத்தின் 45(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் சுல்கிப்லி சொன்னார்.
பேரணியை நடத்த வேண்டாம் எனக் கூறப்பட்ட போதிலும் அதனைத் தொடர்ந்து நடத்திய, அதற்குப் பின்னணியில் இருந்த மக்கள் மீது தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் கூறினார்.
இன்றையச் சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாம் என இந்திய சமூகத்திடம் பேசுவதற்கு முன்வந்த 13 அரசு சாரா இந்திய அமைப்புக்களின் தலைவர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஜிஞ்சாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு மனித உரிமைக் கட்சி/ இண்ட்ராப் தலைவர் உதயகுமார் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் போலீஸ் நிலையத்துக்குச் செல்லும் வழிகளில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்பார்த்து கலகத் தடுப்புப் போலீசாரும் சீருடை அணிந்த போலீஸ்காரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாலை மணி 4 வாக்கில் அந்த போலீஸ் நிலையத்துக்கு வெளியில் கூடிய மக்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டியது. அவர்கள் “இண்ட்ராப் வாழ்க” என்றும் மற்ற சுலோகங்கலையும் முழங்கினர்.
உயர்கல்வி பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோதமாக பேரணி நடத்த முயன்ற குற்றத்துக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட ஹிண்ட்ராஃபின் கிளை அமைப்பான இந்து உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரணி நடத்த வேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தோம். எனினும் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவரும், துணை கமிஷனருமான ஜுல்கிஃப்லி அப்துல்லா தெரிவித்தார்.
மனித உரிமைக் கட்சி/இண்ட்ராப் பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 109 என்றும் ஏற்கனவே கூறப்பட்டது போல 183 அல்ல என்றும் கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் சுல்கிப்லி அப்துல்லா கூறினார்.
போலீஸ் நடவடிக்கையின்போது தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட 183 பேரில் வழிப்போக்கர்களும் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அடங்குவர் என அவர் சொன்னார். அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.பேரணி தொடர்பில் கைதானவர்கள் 18 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் எண்மர் பெண்கள். எட்டு பேர் மனித உரிமைக் கட்சித் தலைவர்கள் என்றும் சுல்கிப்லி அறிவித்தார்.
போலீஸ் நடவடிக்கை பற்றி விளக்கிய சுல்கிப்லி, “ஒன்று கூடுவதற்கான அனுமதி நிரகாரிக்கப்பட்டும் அதற்கு திட்டமிட்டவர்கள் அதனைத் தொடருவதற்குப் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”, என்றார்.
தாங்கள் மாற்று ஊடகங்களைச் சார்ந்தவர்கள் என்று இருவர் கூறிக் கொண்டதாகவும் சுல்கிப்லி தெரிவித்தார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் போலி பத்திரிக்கை அடையாள அட்டைகளை வைத்திருந்த அடையாளம் தெரியாத சிலர் போலீசாருடன் மோதுவதற்கு முயற்சி செய்ததாக மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் சட்ட விரோதமாக கூடியதற்காக போலீஸ் சட்டத்தின் 27(5) வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.மனித உரிமைக் கட்சித் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள எண்மர் மீது சட்டவிரோத அமைப்பு ஒன்றுடன் சம்பந்தப்பட்டதற்காகவும் சங்கச் சட்டத்தின் 45(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் சுல்கிப்லி சொன்னார்.
பேரணியை நடத்த வேண்டாம் எனக் கூறப்பட்ட போதிலும் அதனைத் தொடர்ந்து நடத்திய, அதற்குப் பின்னணியில் இருந்த மக்கள் மீது தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் கூறினார்.
இன்றையச் சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாம் என இந்திய சமூகத்திடம் பேசுவதற்கு முன்வந்த 13 அரசு சாரா இந்திய அமைப்புக்களின் தலைவர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஜிஞ்சாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு மனித உரிமைக் கட்சி/ இண்ட்ராப் தலைவர் உதயகுமார் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.அந்தப் போலீஸ் நிலையத்துக்குச் செல்லும் வழிகளில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்பார்த்து கலகத் தடுப்புப் போலீசாரும் சீருடை அணிந்த போலீஸ்காரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாலை மணி 4 வாக்கில் அந்த போலீஸ் நிலையத்துக்கு வெளியில் கூடிய மக்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டியது. அவர்கள் “இண்ட்ராப் வாழ்க” என்றும் மற்ற சுலோகங்கலையும் முழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக