Loading

வெள்ளி, 28 ஜனவரி, 2011

முஸ்லிம் மக்கள் தொகை-இந்தோனேசியாவை பின்னுக்குத் தள்ளப் போகும் பாக்.


 முஸ்லீம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில்
 இருக்கும் இந்தோனேசியாவை விரைவில்
 பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப்
 பிடிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.
அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின்
 எண்ணிக்கை 23. 6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது.
 மேலும்,அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள்
 தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி 
விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் 
என்றும் அது தெரிவிக்கிறது.


இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில்
 கூறப்பட்டிருப்பதாவது,

அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள்
 தொகையைவிட முஸ்லிம் மக்கள்தொகை இரண்டு மடங்கு
 அதிக வேகத்தில் அதிகரிக்கும்.
தற்போதைய சூழல் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் இருக்கும்
 8.3 பில்லியன் மக்கள் தொகையில் 26.4 சதவிகிதம்
 முஸ்லிம்கள் இருப்பார்கள். கடந்த 2010ல் இருந்த
 6.9 பில்லியன் மக்கள்தொகையில் 23.4 சதவிகிதம் பேர்
 முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


அதேபோல் பிரிட்டனில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5.5 மில்லியன்களாகக் காணப்படும் எனவும் இத்தொகையானது குவைத்தில் உள்ள முஸ்லிம்களின்
 தொகையை விட அதிகம் எனவும் அவ்வறிக்கையில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகப்படியான இடம்பெயர்வுகளே இதற்கான 
காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில்
 உள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார்
 6.2 மில்லியனாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி பிரித்தானியாவில் குடியேறும்
 4 பேரில் ஒருவர் முஸ்லிம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகையில் 26 % முஸ்லிம்களாக காணப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Posted by ஆசிய நண்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக