Loading

சனி, 29 ஜனவரி, 2011

7,160 டிகிரியில் கடும் வெப்பமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு


விண்ணில் சூரிய குடும்ப கிரகங்கள் மட்டுமின்றி எண்ணிலடங்கா கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளன. இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் புது புது கிரகங்களை கண்டு பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு கிரகத்தை கண்டு பிடித்துள்ளனர். டபிள்யூ, ஏ.எஸ்.பி.-33 பி என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். இதை எச்.டி. 15082 என்றும் அழைக்கின்றனர்.இது மிகவும் கடுமையான வெப்பம் உடைய கிரகமாகும். 7160 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் இது உள்ளது.
தற்போது இதுதான் மிகுந்த வெப்பமுடைய கிரகம் என கருதப்படுகிறது. ஏனெனில் சூரியனின் வெப்பம் 5,600 டிகிரி செல்சியஸ்தான். இதற்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் 3,200 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாக இருந்தது.
இது அதை மிஞ்சி இரு மடங்கு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது.கடந்த 2006-ம் ஆண்டு தான் முதன் முதலாக இந்த கிரகம் விஞ்ஞானிகள் அறிந்தனர். அதன் பின்னர் தான் ஆய்வு மேற் கொண்டனர். இது வியாழன் கிரகத்தை விட 4 1/2 மடங்கு பெரியது. மேலும் சூரியனில் இருந்து புதனுக்கும் இடையே 7 சதவீதம் குறைவான தூரத்தில் இது உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக