Loading

வியாழன், 21 அக்டோபர், 2010

தமிழக கவர்னர் பர்னாலா!

தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று தனது 86வது வயதைத் தொட்டார். 1925 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் அடெலி என்ற கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த பர்னாலா 1946ல் லக்னோ பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் லக்னோவில் கலந்து கொண்டார்.

1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார் பர்னாலா. தமிழகத்தின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் இவர் ஏற்கனவே 1990 முதல் 1991 வரையிலும் தமிழகத்தின் கவர்னராக பதவி வகித்து வந்தார். அப்போதைய தமிழக அரசை கலைப்பது குறித்து மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பர்னாலா, பின்னர் பதவி விலகினார்.

உத்தர்காண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட 2000ம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை அம்மாநில கவர்னராகவும், பின்னர் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திராவின் கவர்னராகவும் நியமிக்கப்பட்ட பர்னாலா, 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழகத்தின் கவர்னராக நீடித்து வருகிறார்.

86 வயதைத் தொட்ட மூத்த அரசியல்வாதியான பர்னாலாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக