Loading

வெள்ளி, 17 செப்டம்பர், 2010



எல்லோரின்  தொலைபேசி உரையாடலின் முதல் வார்த்தை ஹலோ மட்டுமே . ஆனால் இந்த சொல் எப்படி வந்தது என சிந்திப்பது கிடையாது . கிரகாம் பெல் தொலைபேசியை உருவாக்கி இருந்தாலும் இந்த சொல்லிற்கு  சொந்தக்காரர் எடிசன் .



 கிரகம் பெல்லின் அல்லது தொலைபேசியில் உரையாடிய முதல் வார்த்தை "Mr. Watson, come here. I want to see you."  வொட்சன் உன்னை பார்க்க வேண்டும் இங்கே வா என்பதே " . ஆனால் 1877 இல் எடிசன் தொலைபேசிகளை வியாபார நோக்காகவே பார்த்தார் . 


அப்போது ஒரு பிரச்சனை தோன்றியது வேலைத்தளங்களில் இருவர் பேச  எண்ணும் போது எப்படி மற்றொருவர் க்கு புரியும்.ஒருவர் அழைப்பை ஏற்ப்படுத்தும் போது  ஒரு (எலார்ம்) மணி போல சத்தமிடும் அமைப்பை திட்டமிட்டிருந்தனர் .

ஆனால் எடிசன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இருந்த நிறுவன அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார் .  Friend David, I don't think we shall need a call bell as Hello! can be heard 10 to 20 feet away. What do you think? அழைப்பு மணி தேவைப்படாது , ஹெலோ  என்ற வார்த்தையை ஏன் பாவிக்க கூடாது அது 10 தொடக்கம் 20 அடிகள் வரை கேட்க்க  கூடியது என கூறியிருந்தார் . 


ஆனால் அகோய் Akoy  என்ற  சொல்லே ஹெலோ வர முதல் பாவனையில் இருந்தது . ஆனால் ஆதி காலங்களில் ஹெலோ  சொல் பலரை சத்தமாக  அழைப்பதற்கு பாவிக்கப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக