அமைதி காக்குமாறு பிரதமர்
, சோனியா கோரிக்கை!
டெல்லி: அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி,
மக்கள்அனைவரும் அமைதி காக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி நில விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள
பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது.
இந் நிலையில் தனது இல்லத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்
பேசிய பிரதமர் மன்மோகன் சிங்
,
அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும்
அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வாரத்துக்கு முன்பு, மத்திய அமைச்சரவை வெளியிட்ட தீர்மானத்திலேயே
எனது வேண்டுகோள் இடம் பெற்றுள்ளது.
அயோத்தி வழக்கு
தீர்ப்பை அனைவரும் உரிய மரியாதையுடன் ஏற்க வேண்டும்.
அதேசமயத்தில், இந்த தீர்ப்பு, நீதித்துறை நடவடிக்கையில் ஒரு படி என்பதை நினைவில்
கொள்ள வேண்டும். தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளாவிட்டால்,
இப்பிரச்சனை, இந்தத் தீர்ப்புடன் நின்று விடாது. மேற்கொண்டு நீதிமன்ற பரிசீலனை தேவை
என்று எந்த தரப்பினராவது கருதினால், அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன.
எனவே அதற்குள் யாரும் எதிர்த் தரப்பினரின் ஆத்திரத்தை தூண்டும் வகையில
மற்றவர்களின் உணர்வுகளை துன்புறுத்தும் வகையிலோ செயல்பட வேண்டாம்
என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த தீர்மானத்தில் நாங்கள் கோரியுள்ளோம்.
அதே கோரிக்கையைத் தான் நான் இப்போதும் முன் வைக்கிறேன் என்றார்.
எந்த தீர்ப்பு வந்தாலும் அமைதி காப்போம்-சோனியா:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அயோத்தி தொடர்பாக நாளை கோர்ட்டு எந்த தீர்ப்பு வழங்கினாலும்
அதை நாம் ஏற்றுக் கொள்வோம் . ஒற்றுமைதான் நமது சமூகத்தின் பலம்.
இதை அனைவரும் மனதில் கொண்டு அமைதி காப்போம் என்று கூறியுள்ளார்.
மக்கள்அனைவரும் அமைதி காக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி நில விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள
பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது.
இந் நிலையில் தனது இல்லத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்
பேசிய பிரதமர் மன்மோகன் சிங்
,அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும்
அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வாரத்துக்கு முன்பு, மத்திய அமைச்சரவை வெளியிட்ட தீர்மானத்திலேயே
எனது வேண்டுகோள் இடம் பெற்றுள்ளது.
அயோத்தி வழக்கு
தீர்ப்பை அனைவரும் உரிய மரியாதையுடன் ஏற்க வேண்டும். அதேசமயத்தில், இந்த தீர்ப்பு, நீதித்துறை நடவடிக்கையில் ஒரு படி என்பதை நினைவில்
கொள்ள வேண்டும். தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளாவிட்டால்,
இப்பிரச்சனை, இந்தத் தீர்ப்புடன் நின்று விடாது. மேற்கொண்டு நீதிமன்ற பரிசீலனை தேவை
என்று எந்த தரப்பினராவது கருதினால், அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன.
எனவே அதற்குள் யாரும் எதிர்த் தரப்பினரின் ஆத்திரத்தை தூண்டும் வகையில
மற்றவர்களின் உணர்வுகளை துன்புறுத்தும் வகையிலோ செயல்பட வேண்டாம்
என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த தீர்மானத்தில் நாங்கள் கோரியுள்ளோம்.
அதே கோரிக்கையைத் தான் நான் இப்போதும் முன் வைக்கிறேன் என்றார்.
எந்த தீர்ப்பு வந்தாலும் அமைதி காப்போம்-சோனியா:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அயோத்தி தொடர்பாக நாளை கோர்ட்டு எந்த தீர்ப்பு வழங்கினாலும்
அதை நாம் ஏற்றுக் கொள்வோம் . ஒற்றுமைதான் நமது சமூகத்தின் பலம்.
இதை அனைவரும் மனதில் கொண்டு அமைதி காப்போம் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக