Loading

திங்கள், 5 செப்டம்பர், 2011

பஞ்சம் தலை விரித்தடும் சோமாலியா !


சோமாலியாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக 750,000 பேர் வரை எதிர்வரும் மாதங்களில் உயிரிழக்க நேரிடலாமென ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் 60 வருடங்களாக ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். அல் ஷபாப் என்னும் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சோமாலியா உட்பட சோமாலியாவில் ஆறு இடங்கள் பஞ்சம் நிலவும் வலயங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.


அப்பகுதியிலுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. சோமாலியாவில் மொத்தமாக 4 மில்லியன் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் 750,000 பேர் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உயிரிழந்தவர்களில் அரைவாசிப் பேர் சிறார்கள் ஆவார். அயல் நாடுகளான டிஜிபௌட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா உகண்டா ஆகியவையும் மழை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக