Loading

சனி, 13 ஆகஸ்ட், 2011

பல்துலக்கும் பிரஷ்கள் மூலம் நோய் ?


"பல்துலக்கும் "பிரஷ்'கள் மூலம் ஹெபடிட்டிஸ் "பி' வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.
தடுப்பூசி மூலம் மஞ்சள் காமாலை நோய் வராமல் நிரந்தரமாக பாதுகாக்கலாம்,'' என, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் தாயுமானவர் தெரிவித்தார். கல்லீரலை பாதிக்கும் வகையில் ஹெபடிட்டிஸ் வைரஸ்கள் செயல்படுகின்றன. ஹெபடிட்டிஸ் ஏ, பி, சி, டி, இ... வரை கண்டறியப் பட்டுள்ளன. இதில் "ஏ' மற்றும் "இ' வைரஸ்களால் பெரியளவில் பாதிப்பில்லை. "இ' வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் மூன்றாவது காலாண்டு பருவத்தில் 20 சதவீத உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.



உலகளவில் 17 கோடி மக்களின் உடலில் ஹெபடிட்டிஸ் "பி' வைரஸ் உள்ளது. சுத்தப்படுத்தாத ஊசிகள், சுத்தம் செய்யப்படாத அறுவை சிகிச்சை கருவிகளை பயன்படுத்துதல், நோய் தாக்கியோருடன் தாம்பத்ய உறவு கொள்ளுதல் மூலமும், கர்ப்பிணிகள் மூலம், பிறக்கும் குழந்தைகளுக்கும் எளிதாக வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது.

"பி' வைரஸ் தாக்கிய நபரின் பல்துலக்கும் பிரஷ் அருகில் மற்றொருவரின் பிரஷ் இருந்தால் கூட, நோய் பரவும் அபாயம் உள்ளதாக, சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஆறு மாதத்திற்குள் பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, கல்லீரல் அருகில் வலி, மஞ்சள்காமாலை ஏற்படும். பிறந்தது முதல் 18 மாத குழந்தைகளில், 85 சதவீதம் பேருக்கு கல்லீரல் சுருக்கத்தையும், நாளைடைவில் கல்லீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

எந்த வயதினராக இருந்தாலும், தடுப்பூசி போடுவதன் மூலம் "பி' வைரஸ் வராமல் பாதுகாக்கலாம். முதல் ஊசி போட்டபின், அடுத்த மாதம், ஆறாவது மாதம் என மூன்று இடைவெளிகளில் முறையாக ஊசி போட்டால், நிரந்தரமாக நோய் வராமல் தடுக்கலாம். தடுப்பூசியின் விலையும் குறைவு. அரசு மருத்துவமனைகளில் இலவச ரத்தபரிசோதனை செய்யப்படுகிறது, என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக