
புதுடெல்லி: நாட்டின் 65வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சென்னை கோட்டையில் ஜெயலலிதாவும் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகின்றனர்.
இந்தியாவின் 65வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். விழாவில் வண்ணமயமான அணிவகுப்பு இடம் பெறுகிறது. இதில் முப்படைகளின் சாகசங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
சுதந்திர தின விழாக்களின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க, டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். டெல்லி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் 40 விசேஷ கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. குறிபார்த்து சுடுவதில் திறமை வாய்ந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், உயரமான கட்டிடங்களில் நிறுத்தப்படுகின்றனர். நாடாளுமன்ற வளாகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாயினர். அது போன்று தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக டெல்லி போலீஸ் இணை கமிஷ னர் சத்யேந்திர கர்க் தெரிவித்துள்ளார். அணிவகுப்பு மற்றும் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டை பகுதியில் 7 மணி நேரத்துக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் : சென்னையில் கோட்டை கொத்தளத்தில் நாளை காலை 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 85 ஆயி ரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக