சீனாவில் ஷின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் தனிநாடு கோரி போராட்டம் நடத்திவருகிறார்கள். இவர்களை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்து இருக்கிறது. உரும்பி நகரில் 2009-ம் ஆண்டு தனிநாடு கோரும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்கியது.
இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்த மாநிலத்தில் 20 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் என்று சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. கிழக்கு துர்க்மெனிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் பாகிஸ்தானில் உள்ள முகாம்களில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தது. இங்கு பயிற்சி எடுத்துக்கொண்ட தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சீனாவில் உள்ள கஷ்கர் முனிசிபல் நிர்வாகம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக