Loading

புதன், 27 ஜூலை, 2011

சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்


ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடுகிறார்கள்.
கென்யாவில் 35 லட்சம் மக்கள் ஐ.நா நிவாரண உதவியை எதிர்பார்த்து உள்ளனர். தெற்கு சோமாலியாவில் தீவிரவாத அமைப்பினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பட்டினி நிலை தீவிரமாக உள்ளது.

கென்யாவில் வடகிழக்கு பகுதி மாவட்டங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த பகுதிகளில் செப்டம்பர் மாதங்களில் வறட்சி பிரச்சனை தீவிரமாகும் என கென்யாவுக்கான ஐ.நா மனித நேய ஒருங்கிணைப்பாளர் நேற்று கூறினார்.

கென்யாவில் தற்போது 24 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் கென்யாவில் தேசிய பேரிடராக இந்த வறட்சி அறிவிக்கப்பட்டது.

ஐ.நா உலக உணவுத் திட்டம் கூறுகையில்,"தற்போது 17 லட்சம் கென்ய மக்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. மேலும் 8 லட்சம் மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என அரசு நிர்ணயித்து உள்ளது" என்றார்.


கென்யாவின் வறட்சி நிவாரண உதவிக்கு 60.50 கோடி டொலர் உதவி தேவை என ஐ.நா மனித நேய அலுவலகம் வேண்டுகோள் விடுத்தது. தற்போது 52 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா அவசர நிதிநிலை நேற்று ஒரு கோடியே 35 லட்சம் டொலர் விடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக