
பெரும் பெரும் செல்வந்தர்கள் தான் தங்கள் செல்வங்களைவாரி வழங்க வேண்டும் என தர்மத்திற்கு தவறானஅளவுகோல் கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், எதனை எதற்காக தானதர்மம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடும் போது, ஒருபேரீத்தம் பழத்தின் துண்டையேனும் தர்மம் செய்து நரகநெருப்பில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள்என்றார்கள்.
இத்தகைய தர்மம் மூலம் ஒரு நோன்பாளி இருநோன்பாளிகளின் நன்மையை பெறும் வழிவகையைப் பற்றிபெருமானார் (ஸல்) அவர்கள் கூறும்போது, யார் ஒருநோன்பாளிக்கு நோன்பு துறக்க உணவு வழங்குவாரோ,அவருக்கு நோன்பாளியைப் போன்றே பூரணமாக கூலிவழங்கப்படும் என்றார்கள்.
இது போன்று ஏராளமான நன்மையை அள்ளிச் சொரியும்சங்கை மிக்க ரமளான் நம்மை அண்மித்து வருகின்றது.ஒவ்வொரு முறை நம்மைவிட்டு ரமளான் பிரிந்து செல்லும்போதும் நாம் கைசேதப்படுவதுண்டு. இப்போதுதான்இபாதத்துகளை செய்யத் துவங்கினேன், அதற்குள் இம்மாதம்முடிந்து விட்டதே என்று. இதற்கு காரணம் ரமளானுக்கு என்றுமுன்னமே நாம் திட்டமிடாமல் போனதுதான். எனவே வரும்ரமளானையாவது முழுவதுமாக பயன்படுத்துவதற்கு நாம்தயார் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக