Loading

சனி, 16 ஜூலை, 2011

மருந்து விலையை தெரிந்துகொள்ள ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் போதும் ?





மொபைல்போனில் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுந்தகவல்சேவை மூலம், மருந்துகள் விலை குறித்த பட்டியலை
வெளியிட,தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் மருந்து விலைகளை
கட்டுப்படுத்தும்நோக்கத்துடன், மத்திய அர” பல்@வறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, மொபைல்போன் மூலம் பல்@வறு மருந்துகளின் விலைப் பட்டியலை வெளியிடும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தின் பிராண்டு பெயரை தெரிவித்து, குறிப்பிட்ட அமைப்பின் முகவரிக்கு குறுந்தகவல் அனுப்பவேண்டும்.
அவ்வாறு அனுப்பினால், அ@த மருந்தின் பல்@வறு பிராண்டு பெயர்களும், அவற்றின் விலைப் பட்டியலும் அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், குறைந்த விலையில் கிடைக்கும் மருந்தை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையை கட்டுப்படுத்தவும், சாதாரண மக்களுக்கு அனைத்து வகை மருந்துகளும் மலிவு விலையில் கிடைக்கவேண்டும் என்றநோக்கத்திலும் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம்,நோயாளிகளின் மருத்துவச் செலவு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும்.எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்@வறு சட்ட சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை மட்டும், விற்பனையாளர்கள் வழங்கவேண்டு@ம தவிர,வேறு பிராண்டு பெயரைக் கொண்ட மருந்துகளை விற்பது சட்டப்படி குற்றம் என்று மருந்து விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
மலிவு விலை மருந்துகளில் குறைந்த அளவிற்கே லாபம் கிடைக்கும் என்பதால், அவற்றை விற்பனை செ#ய கடைக்காரர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் அவர்மேலும் தெரிவித்தார். அது மட்டுமின்றி, மருந்து நிறுவனங்களின் நிர்பந்தம் காரணமாக, பல மருத்துவர்கள், விலை உயர்ந்த மருந்துகளையேநோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மருந்து நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை உள்ளது. அதனால், அவை, மாற்று வழியில் அவற்றின் தயாரிப்புகளை பிரபலப்படுத்துகின்றன. மருத்துவரின் பரிந்துரைப்படியேநோயாளிகள் மருந்து வாங்குவதால், மருத்துவர்களை குறி வைத்து, அவற்றின் விற்பனை இலக்கை நிர்ணயிக்கின்றன. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் மருந்துகளை விற்பனை செய்வதற்காக சகல வகையிலும் மருத்துவர்களை 'கவனி'த்து கொள்கின்றன. சில நிறுவனங்கள், விலை உயர்ந்த பரி”ப் பொருள்களையும், வீட்டு பயன்பாட்டு சாதனங்களையும் வழங்குகின்றன. இலவச வெளிநாட்டு ”ற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்கின்றன. இதுபோன்ற காரணங்களால், மருத்துவர்கள், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மருந்துகளையே,நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாகக் கூறப்படுகிறது.மேலும், மருந்துகளை, மருத்துவர்களிடம்நேரடியாக கொண்டுசேர்க்கும் விற்பனை பிரதிநிதிகளுக்கும் கவர்ச்சிகரமான ஊதியத்துடன், பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்காகவும், சமூக அக்கறை என்ற பெயரில் பிராண்டு பெயரை பிரபலப்படுத்துவதற்காகவும், மருந்து நிறுவனங்கள், பெருந்தொகையை செலவிடுகின்றன. இதனால், இவை, மருந்துகளுக்கு அதிக விலையை நிர்ணயிக்கின்றன. இந்த செலவுகள் அனைத்தும்நோயாளிகளின் தலையில் விழுகின்றன.@தசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் அண்மையில்மேற்கொண்ட ஆய்வில், ஒ@ர மருத்துவ குணம் கொண்ட மருந்தின் விலை, நிறுவனங்களுக்கிடையே 10 மடங்கு என்ற அளவில் வித்தியாசம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது, 100 ரூபாய்க்கு கிடைக்கும் மலிவு விலை மருந்து,வேறு பிராண்டு பெயரில் 1,000 ரூபா#க்கு விற்கப்படுகிறது.
புதிய திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில்,நோயாளிகள், இத்தகைய பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மலிவு விலை மருந்துகளை வாங்கி, செலவை கட்டுப்படுத்தலாம். எனினும், இந்த நடவடிக்கையால், விலை உயர்ந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்,போட்டியை சமாளிக்க, இந்நிறுவனங்களும் மருந்துகளின் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக இத்துறையைசேர்ந்தவர்கள் தெரிவித்தனர். நாட்டில், தற்போது 90 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பிராண்டுகளில் மருந்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வகைப்படுத்தி, ஒ@ரநோய்க்கு தீர்வளிக்கும் பலதரப்பட்ட பிராண்டுகளை வகைப்படுத்தி, அவற்றின் விலை விவரங்களை தொகுக்கும் மாபெரும் பணியை,தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம்மேற்கொண்டு வருகிறது.

இப்பணி முடிவடைந்ததும், மொபைல்போனில், குறுந்தகவல்சேவை மூலம் மருந்துகளின் விலைப் பட்டியல் குறித்த விவரங்கள் அனுப்பும் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும், பிராண்டு மருந்துகளுக்கு மாற்றாக, பொதுப்பண்பு அடிப்படையில் மருந்துகளை விற்பனை செய்யவும் மத்திய அர” திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஜன் ஆஷாதி' என்ற பெயரில் 3,000க்கும்மேற்பட்ட கடைகள் திறக்கப்பட உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால், மருந்துகளுக்காகநோயாளிகள் செலவிடும் தொகை, வெகு வாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக