ஆப்கானிஸ்தானில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் போலீசார் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். தலிபான்கள் அதிகம் உள்ள தென்மேற்கு ஆப்கனின் ஹெல்மான்ட் உள்ளிட்ட பகுதிகளில் தலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கும் தொடர் சண்டை நடந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் வன்முறை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஹெல்மான்ட் அருகே நேற்று நடந்த வன்முறையில் 22 தலிபான்களும், 2 போலீசாரும் கொல்லப்பட்டனர். ஹெல்மான்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சாலையில் நடந்து சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மத்திய மற்றும் வட ஹெல்மான்ட் பகுதியிலும் நேற்று வன்முறை சம்பவங்கள் நடந்தன. தலைநகர் லஸ்கர்பா அருகில் நந்தியாலி பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டனர். முசாகுலா மாவட்டத்தில் போலீஸ் சோதனைச் சாவடியில் தலிபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் தலிபான்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் வன்முறையாளர்கள் 14 பேரும், போலீசார் 2 பேரும் உயிரிழந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக