சீனாவின் மத்திய பகுதியில் உள்ள மாகாணம் ஹெனான். இங்குள்ள பீஜிங் - ஜூஹாய் விரைவு நெடுஞ்சாலையில், நேற்று மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 35 இருக்கைகள் கொண்ட, அந்த பஸ்சில், 47 பேர் பயணம் செய்தனர்.
வீகாய் நகரிலிருந்து சங்ஷா நகருக்கு சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில், 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் உள்ளிட்ட ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். "விசாரணைக்கு பின்பே, பஸ் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியும்' என, பணிப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி சாங் கவுஹாய் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக