பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் 300 கட்சிகள் இதுவரை வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ததில்லை என்பது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அக்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிறிய கட்சிகள் வருமான வரிச் சட்டங்களை மீறி வருவதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்ட புகார்களையடுத்து அக்கட்சிகளின் நிதி நிலைமை குறித்து விசாரிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் 300 அரசியல் கட்சிகள் இதுவரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதது தெரியவந்தது.
தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதர மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் நிதிநிலைமை குறித்தும் விரைவில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று இந்த பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக