கறிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற வாசனைத் திரவியங்கள் புற்று நோயை இல்லாமல் செய்து விடும்
என்று அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
என்று அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
24 மணித்தியாலங்களுக்கு இடையில் இவை புற்று நோய்க் கலங்களை அழித்து விடும் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.
புற்று நோய்க் கலங்கள் முழுமையாக அழிந்து விடுகின்றமை இவர்களது ஆய்வு ஒன்றில் அவதானிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இஞ்சி, மஞ்சள் ஆகிய வாசனைத் திரவியங்களில் இச்சக்தி அபரமிதமாக உள்ளது என்று அறியப்பட்டு உள்ளது.
ஆசிய நாட்டுச் சமையல்களில் இஞ்சி, மஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களுக்கு தனி இடம் உண்டு. இவ்வாசனைத் திரவியங்கள் மருத்துவ குணம் உடையன என்று ஆசிய நாட்டவர்கள் காலம் காலமாக நம்புகின்றார்கள்.
சீன, ஆயுர்வேத வைத்தியங்களில் வாசனைத் திரவியங்களுக்கு முக்கியத்துவம் அதிகம்.
இவ்வாசனைத் திரவியங்களுக்கு கொலஸ்ரோலை வெட்டும் சக்தியும் உண்டு. ஆய்வின் முடிவு British Journal of Cancer வெளியாகி இருந்தது. இம்முடிவை அடிப்படையாகக் கொண்டு புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக