
அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு குடியேறிய க்ராபெல், ஜனவரி 25 - ல் நடைபெற்ற தஹ்ரீர் சதுக்க ஆர்பாட்டத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் எகிப்தில் நுழைந்தான், (ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அவனது படம்),
இவன் இஸ்ரேலின் பாரா ட்ரூப்பர் பிரிகேட் (101paratrooper brigade) படைபிரிவில் இணைந்து, 2006 - ல் நடைபெற்ற இஸ்ரேல்- லெபனான் போரில் ஈடுபட்டு காயமடைந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது,
எகிப்தின் சுப்ரீம் ஸ்டேட் ப்ரோசிகியூட்டர் ஹிஸாம் படாவி, க்ராபேல்-ஐ 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், அவன்மீது எகிப்தினுடைய பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை சிதைக்க உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது,
இதற்கிடையில், இஸ்ரேலுடைய வெளியுறவு துறை அமைச்சகம் இந்த சம்பவத்தை உடனடியாக மறுத்துள்ளது, அதன் செய்தி தொடர்பாளர் இகால் பல்மோர் (Yigal Palmor) கூறும்போது, எந்தவொரு இஸ்ரேலுடைய உளவு ஏஜெண்டும் கைது செய்யப்பட்டதாக எகிப்திடமிருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை என்றார்,
source- presst
v
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக