உலகில், 127 நாடுகளிலிருந்து, ஆண்டு ஒன்றுக்கு, பெண்கள், குழந்தைகள் என, 25 லட்சம் பேர் கடத்தப்படுவதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில், சட்டத்திற்கு விரோதமாக வருமானம் ஈட்டும் பட்டியலில், போதை மருந்து கடத்தல் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்தில் மனிதக் கடத்தலும் இடம் பெற்றுள்ளன.
ஆண்டு ஒன்றுக்கு, சர்வதேச அளவில் மனிதக் கடத்தலால் சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருமானம், 23 ஆயிரம் கோடியிலிருந்து, 41 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்று, ஐ.நா., தெரிவித்துள்ளது.
கொத்தடிமைகளாக, குழந்தை தொழிலாளர்களாக மற்றும் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது, உலக நாடுகளில் அதிகளவில் நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக