தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவிலேயே ஹெராயின் விற்பனை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வுக்கான போதை மருந்து கடத்தல் மற்றும் குற்றம் தொடர்பான 2011ஆம் ஆண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் வருடாந்தம் 1.9 பில்லியன் டொலர் அளவுக்கு ஹெராயின் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் அதிகபட்சமாக 1.4 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவிலும், பாகிஸ்தானிலும் தான் ஹெராயினை நுகர்வர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஈரானில் உள்ளனர்.
யு.என்.ஓ.டி.சி அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த 2009-ம் ஆண்டில் உலக அளவில் 149 முதல் 203 மில்லியன் மக்கள் போதை மருந்தினை உபயோகப்படுத்தியுள்ளனர். இதே போன்று மெராக்கோ, லெபனான், நேபாள் ஆகிய நாடுகளில் ஹாஸிஸ் எனும் போதை மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது.
தவிர கோகைன் போன்றவைகளும் ஆசிய சந்தையில் பெருகிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக