Loading

சனி, 4 ஜூன், 2011

சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூடு


சிரியாவில் அதிபர் பாஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். அவர்கள் அதிபர் பாஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் கண்டன பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.   இதில் 35 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்ட வர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் பிரிவு தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தற்போது கலவரம் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக