Loading

வியாழன், 16 ஜூன், 2011

ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் ஆபாச பத்திரிக்கைகள்...


AIADMK General Secretary J Jayalalitha smiles during a day-long fast demanding ceasefire in Sri Lanka, in Chennai on March 09, 2009.
தேர்தலுக்கு மும்பும்தேர்தல் சமயத்திலும்அப்போதைய ஆளும்கட்சிக்குஜால்ரா அடித்த்க்கொண்டிருந்த , - காரணம் - பெரும்பாலும்,கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தையும் மிரட்டலையும் சமாளிக்க முடியாமல் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்த -பத்திரிக்கைகள்ஆட்சி மாற்றம் நிகந்தவுடன் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டி குதூகலித்தன.
கருணாநிதியின் இந்த படுதோல்விக்கு காரணம் - அவரது கடந்த கால ஆட்சியின் ஊழலும்குடும்ப உறுப்பினர்களின் அளவுக்கதிகமானதலையீடுதான் என்று தெரிந்தும்ஜெயலலிதா ஏதோ சாதனை செய்தும்,தனது திறமையினாலும்தான்  மறுபடியும் வெற்றிபெற்றார் என்பதுபோல தமது மன இச்சைப்படி பொய்களை பரப்பி வருகின்றன..

இப்படி ஒவ்வொருத்தரும் தமது சொந்த கருத்துக்களையும்தமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் மக்களிடம் திணிப்பதிலேயே குறியாக இருந்துகொண்டுபொய்களையும் புரட்டுகளையும் பரப்பிபொதுமக்களை - ஏற்கனவே சினிமா - சின்னத்திரை - மாயைகளால்  அறிவிழந்து முட்டாள்களாக இருக்கும் பொதுமக்களை  மேலும் முட்டாள்களாக்கி வருகின்றன.
ஜெயலலிதா தாம் ஆட்சி அமைக்கும்போதே
கோமாளி சோவின் ஆலோசனையின் பேரில்  ஒரு பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை அழைத்து அந்த பதவியேற்ப்பு விழாவை அசிங்கப்படுத்தினர்.
வீண் கூச்சலிட்டு ஒன்றும் உபயோகமில்லை என்று  தெரிந்து்ம்   பக்கத்து நாட்டில் இருக்கும் ராஜபக்ஷேவை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரலிடும் - இந்த மேதாவிகள்உள்நாட்டிலேயே கொலை - மதவெறியாட்டம் போட்ட பயங்கரவாதி நரந்திரன் மோடியை வரவேற்று மகிழ்ந்தனர்.
அவனை விரட்டி அடிக்கவேண்டிய பொறுப்பிலிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகள் கூடிகுலாவின.  முஸ்லிம்களுக்கான கட்சி என்று ஓலமிட்ட தமுமுக வினர் புறமுதுகு காட்டி மோடியைக்கண்டு ஓடி ஒளிந்தனர்.

இப்படி ஆரம்பித்த ஜெயாவின் ஆட்சிஅவரது ஆணவத்தினாலும்,பிடிவாதத்தினாலும் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணமும் - படிப்பும் நாசாமாவது கண்டும் இந்த ஜால்ரா போடும் ஆபாச பத்திரிக்கைகள் சிறிதும் வாய் திறக்காமல் மெளனமாக இருக்கும் காட்சி அருவருக்க வைக்கிறது.
மின்சார சேமிப்பு என்று இலவச டிவியை ஜெயலலிதா ரத்து செய்தார். எமிஜியாரால் கலைக்கப்பட்ட மேல்சபையை மீண்டும் கொண்டுவரமாட்டோம்  என்று மேல்சபை நியமனத்தையும் ரத்து செய்தார். எல்லாம் சரிதான்..
ஆனால் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டபட்ட காரணத்திற்காகபுதிய தலைமை செயலகத்தை புறக்கநித்திருப்பதை தட்டிக்கேட்க வக்கிலாமால் இந்த ஆபாச ஜால்ரா பத்திரிக்கைகள்   புடுங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த கட்டம் கருணாநிதி சினிமா வசனம் எழுதி சாம்பாதித்து கட்டிய கட்டிடமல்ல.
ஜெயலலிதா எம்ஜியாருடனும்சிவாஜியுடனும்,  சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய கட்டிடமுமல்லஇஷ்டத்திற்கு விட்டுவிட.
அத்தனையும் பொதுமக்களின் வரிப்பணம்..
இந்த பத்திரிக்கைகளும் சட்டமும் என்ன புடுங்கிகொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை..
அப்படியே அந்த கட்டிடம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லைஎன்றாலும்,  ஒரு குறிப்பிட்ட காலவரையறை கொடுத்து அதற்குள் முழுமையாக கட்டிமுடித்து அங்கேயே சட்டசபை இயங்கவேண்டும் என்று அறிவுள்ள எவனும் சொல்லுவான்.
இதை தட்டிகேட்க முடியாத கோழைகளாக சட்டமும் பத்திரிக்கைகளும் - ஆளும் கட்சிக்கு தலையாட்டும் அடிவருடிகளாக இருப்பது இந்நாட்டின் சாபக்கேடு.

கருணாநிதி கட்டினார் என்பதற்காகவே புதிய தமைசெயலக கட்டிடத்திற்கு போக விரும்பாத ஜெயலலிதாகருணாநிதி காலத்தில் கட்டிய பாலங்கள் சாலைகளில் பயணம் செய்யாமல் இருப்பாரா?

கருணாநிதி ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களையும் ரத்து செய்து ஆட்சியமைப்பையும் அரசியல் சாசன சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி வருகிறார்.

கலைஞர் காப்பீடு  திட்டம் - சில பல குறைகள் இருந்தாலும் பலராலும் பாராட்டப்பட பயனளித்த நல்லதொரு திட்டம்தான்.
இவருக்கு பிடிக்காதது கருனாநிதியைதான்..தேவைப்பட்டால் அந்த திட்டத்துக்கு ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்று பெயரை வைத்துக்கொள்ளட்டும். பல லட்சகணக்கான மக்கள் பயனடைந்த இந்த திட்டத்தை ரத்து செய்து தனது சுய வெறுப்பு விருப்பை இதில் காட்டுவது ஏன்?
இதை கண்டித்து தட்டிக்கேட்க வேண்டிய  ஜால்ரா பத்திரிகைகளும் வாயையும் -----யும் மூடிக்கொண்டிருப்பது ஏன்?

சமச்சீர் கல்வியின் பாடும் இதே நிலைதான். சென்ற கல்வியாண்டில் அமல் படுத்தப்பட்ட இந்த சமச்சீர் கல்விஇந்த ஆண்டில் திடீரென்று ரத்துசெய்யப்பட்டதால் படிக்கும் மாணவர்களும்பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்னும்  கல்வி  நிறுவனங்களும் பெருமளவில் குழம்பிப் போயிருக்கின்றன..
இன்னும் இதற்காக அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ளபுத்தகங்களும்இன்னும் மாற்றியமைக்கப்பட்ட கல்வித்திட்டங்களுக்காக இனி மேலும் அச்சடிக்கப்பட்ட புதிய புத்தகங்களுக்கான பணமும் யார் வீட்டு பணம்?மீண்டும் கேட்கிறேன்ஜெயலலிதா ஆடிப்பாடி நடித்து சம்பாதித்ட பணமா அவர் இஷ்ட்டத்துக்கு வீணடிக்க?
அடுத்ததாக மெட்ரோ ரயில் திட்டம்..பலவேறு நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம்.


மலேசியாஜப்பான்அமெரிக்க போன்ற குறிப்பிட்ட நாடுகளில் மட்டும்செயல்படுத்தப்பட்டுநிதி பற்றாக்குறையிலும் நஷ்டத்திலும் இயங்கிவரும்இன்னொரு திட்டம் மோனோ ரயில் திட்டம்.
மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்திவிட்டுமோனோ ரயில் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருப்பதும் கடைந்தெடுத்த முட்டாள்தனம்.
அதற்கும் ஆபாச பத்திரிக்கைகள் வாய்திறக்காமல் இருப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
ரஜியினின் மருத்துவம் பற்றியும்,கமலின் அடுத்தபடம் பற்றியும்
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும்,வடிவேலுவின் சினிமா வாய்ப்பு பற்றியும்
சோனியா அகர்வாலின் மறுமணம் பற்றியும்
தமனாவின் நீச்சல் உடை பற்றியும்.
விஜயகாந்த் குடிப்பது பற்றியும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதும் ஆபாச பத்திரிக்கைகளுக்கும்
நாசாமாக போகும் மக்கள் பணத்தைப் பற்றி என்ன அக்கறை

நன்றி மர்மயோகி &மின்னஞ்ஞல் பகிர்வு சலீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக