
புதுடெல்லியின் முக்கிய வீதி ஒன்றில் பிரபல வைர வியாபாரி பங்கஞ்கபூர் என்பவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்து கொண்டிருந்ததார். அமலாக்கத்துறையினர் இவர் மீது சிறிது சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் இவர் ஹவாலா பணபரிவர்த்தனையில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலி்ன் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிரடியாக புகுந்து தேடினர். அங்கு ரகசிய அறை இருப்பதை அறிந்த அமலாக்கத் துறையினரர் அப்பகுதியை தீவிரமாக ஆராய்ந்ததில் ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக இந்திய கரன்சி நோட்டுகள் இருந்தன. பெரும்பாலும் அவை 1000 ரூபாய் கரன்சிகள் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு ரூ.9 கோடியே 28 லட்சம் என மதிப்பிட பட்டுள்ளது.
இது தொடர்பாக வைரவியாபாரி பங்கஞ்கபூர் என்வரை கைது செய்து விசாரித்ததில் இவர் துபாய், இங்கிலாந்து நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைப்பதற்காக உள்ள கறுப்பு பணம் என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கடந்த வருடம் மட்டும் 1800 கோடி ரூபாய் ஹவாலா பணபரிவர்த்தனை நடத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது அலுவலகம் உள்ளிட்டவை சீல் வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்துவருவதாக அமலாக்கத்துறை உயரதிகாரிகள் கூறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக