Loading

புதன், 25 மே, 2011

மும்பை தாக்குதலில் எங்கள் உளவு துறைக்கு தொடர்பில்லை; பாகிஸ்தான் மறுப்பு



மும்பை தாக்குதலில் எங்கள் உளவு துறைக்கு தொடர்பில்லை” என பாகிஸ்தான் மறுத்துள் ளது. கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்தினார்ககள். அதில் சுமார் 160 பேர் உயிரிழந்தனர்.

இங்கு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற டேவிட் சாலமன் ஹெட்லி, கனடா குடியுரிமை பெற்ற தவ்கீர் ரானா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிகாகோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


அப்போது தங்கள் சதி திட்டத்துக்கு லஷ்கர் -இ-தொய்பா இயக்கம் மூலம் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) உதவி செய்தது என்று ஹெட்லி வாக்கு மூலம் அளித்துள்ளான். ஆனால், இதை அமெரிக் காவுக்கான பாகிஸ்தான் தூதர் மறுத்துள்ளார். ஹெட்லியின் வாக்குமூலம் முற்றிலும் தவறானது. மும்பை தாக்குதல் நடத்த ஹெட்லிக்கு பாகிஸ்தானின் “ஐ.எஸ்.ஐ.” உளவுத்துறை உதவவில்லை. ஹெட்லி இரட்டை வேடம் போடுகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக